ஆன்மிகம்

திருநாகேஸ்வரம் நாகநாதர் கோவிலில் தீர்த்தவாரி

Published On 2016-12-05 05:15 GMT   |   Update On 2016-12-05 05:15 GMT
திருநாகேஸ்வரம் நாகநாதர் கோவிலில் தீர்த்தவாரி நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு புனித நீராடினர்.
தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள திருநாகேஸ்வரத்தில் நாகநாதர் கோவில் உள்ளது. இக்கோவில் நவக்கிரகங்களில் ராகுவுக்குரிய பரிகார தலமாகும். இங்கு ஆண்டுதோறும் கார்த்திகை மாதம் கடை ஞாயிறு திருவிழா நடைபெறுவது வழக்கம்.

இந்த ஆண்டு கடை ஞாயிறு திருவிழா வருகிற 11-ந் தேதி நடைபெறுகிறது. இதை முன்னிட்டு கடந்த 2-ந் தேதி விழா கொடியேற்றம் நடைபெற்றது.

விழாவையொட்டி கார்த்திகை மாத ஞாயிற்றுக்கிழமைகளில் தீர்த்தவாரி நடைபெற்று வருகிறது. நேற்று கார்த்திகை 3-வது ஞாயிற்றுக்கிழமையையொட்டி தீர்த்தவாரி நடைபெற்றது. இதில் விநாயகர் மூஞ்சுறு வாகனத்திலும், நாகநாதர்-கிரிகுஜாம்பிகை அம்மன் வெள்ளி ரிஷப வாகனத்திலும் சூரியபுஷ்கரணி தீர்த்தக் குளத்தில் எழுந்தருளினர்.

இதையடுத்து சூரியபுஷ்கரணியில் அஸ்திரதேவருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. அதை தொடர்ந்து தீர்த்தவாரி நடைபெற்றது.

இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு புனித நீராடினர்.

நிகழ்ச்சி ஏற்பாடுகளை அறநிலையத்துறை உதவி ஆணையர் ஜீவானந்தம் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து இருந்தனர்.

Similar News