ஆன்மிகம்

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இந்த மாதம் நடக்கும் நிகழ்ச்சிகள்

Published On 2016-12-02 09:09 GMT   |   Update On 2016-12-02 09:10 GMT
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இந்த மாதம் (டிசம்பர்) நடக்கும் விழாக்கள் விவரம் அறிவிக்கப்பட்டுள்ளது. அதை பற்றி விரிவாக கீழே பார்க்கலாம்.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இந்த மாதம் (டிசம்பர்) நடக்கும் விழாக்கள் விவரம் அறிவிக்கப்பட்டுள்ளது, அவை வருமாறு:-

வருகிற 10-ந்தேதி சர்வ ஏகாதசி, 11-ந்தேதி சக்கரத் தீர்த்த முக்கோட்டி உற்சவம், 12-ந் தேதி திருமங்கை ஆழ்வார் சாத்துமுறை, 13-ந்தேதி ஆழ்வார் தீர்த்த முக்கோட்டி உற்சவம், திருப்பந்தாழ்வார் வருட திருநட்சத்திரம், தத்த ஜெயந்தி, கார்த்திகை தீப மகோற்சவம்,

16-ந்தேதி தனுர் மாத தொடக்க விழா, 24-ந்தேதி சர்வ ஏகாதசி, 27-ந்தேதி தொண்டரடிப்பொடி ஆழ்வார் வருட திருநட்சத்திரம், 28-ந்தேதி ஆத்யாயன உற்சவம், 29-ந்தேதி சர்வ அமாவாசை ஆகிய நிகழ்ச்சிகள் நடக்கிறது என்று திருமலை-திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Similar News