ஆன்மிகம்

சபரிமலையில் நடக்கும் படி பூஜை சிறப்பு

Published On 2016-11-29 09:17 GMT   |   Update On 2016-11-29 09:17 GMT
சபரிமலையில் 18 வன தேவதைகள் 18 படியில் குடி கொண்டிருக்கின்றன. 18 தேவதைகளையும் படியில் ஆவாஹனம் செய்து அவர்களை பூஜிப்பதுதான் படி பூஜை.
சபரிமலையில் பிரதான வழிபாடு படி பூஜையாகும். 18 மலைகளால் சூழப்பட்ட புண்ணிய சேத்திரமாகும் சபரிமலை. இந்து மத ஆசாரப்படி சபரிமலைக்குப் போகும் முன்பாக சில முக்கிய கோவில்களில் (ஷேத்திரங்களில்) தரிசனம் செய்து விட்டு போக வேண்டும். சபரிமலையில் 18 வன தேவதைகள் 18 படியில் குடி கொண்டிருக்கின்றன. 18 தேவதைகளையும் படியில் ஆவாஹனம் செய்து அவர்களை பூஜிப்பதுதான் படி பூஜை.

சபரிமலையில் பிரத்யேக வழிபாடு உதயாஸ்தமன பூஜை, எல்லா மாதங்களிலும் இப்பூஜை நடத்தப்படுகிறது. உதயம் முதல் அஸ்தமனம் வரை செய்யப்படும் பூஜைகளான 18 பூஜைகள் உஷ பூஜை முதல் அத்தாழ பூஜை வரை மொத்தம் செய்யப்படும் 18 பூஜைகள் உதயாஸ்தனமான பூஜை. அந்த 18 பூஜைகளையும் நடத்தும் பக்தர்கள் தரிசிக்கலாம்.

இதனால் பிரத்யேக ஐஸ்வர்யம் கிடைக்கும். ஒரு நாளைக்கு மூன்று பூஜைகள் சபரிமலையில் செய்து வரப்படுகின்றன. உஷ பூஜை, உச்ச பூஜை, அத்தாழ பூஜை, இந்த மூன்று பூஜைகளும் சேர்ந்தது 18 பூஜைகள். இந்த பூஜைக்கு பக்தர்கள் முன்பாகவே பதிவு செய்ய வேண்டும். ஒவ்வொரு பூஜைக்கும் பிரத்யேக நைவேத்தயங்கள் உண்டு.

- ஆன்மிகம் பற்றிய உங்கள் கருத்துக்களை mmastronews@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

Similar News