ஆன்மிகம்

விநாயகர் சிலைகளை கடலில் கரைப்பது ஏன்?

Published On 2016-09-28 09:28 GMT   |   Update On 2016-09-28 09:28 GMT
விநாயகர் சதுர்த்தி முடிந்தவுடன் சிலைகளை கடலில் கரைப்பது ஏன் என்பதை கீழே பார்க்கலாம்.
விநாயகர் சதுர்த்தி இந்தியாவில் பல்வேறு இடங்களில் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. மும்பையில் இந்த விழா 10 நாட்கள் தடபுடலாக நடக்கும். இந்த விழாவை 1895-ம் ஆண்டு நிலகர் தொடங்கி வைத்தார். விநாயகர் சதுர்த்தி விழா முடிந்ததும் விநாயகர் சிலைகளை ஊர்வலமாக எடுத்துச் சென்று கடல், ஆறு மற்றும் குளங்களில் கரைப்பர்.

விநாயகப் பெருமானின் தாயார் பார்வதியைப் போல கங்கையும் அவருக்கு அன்னை. எனவே தாய் கங்கையுடன் விநாயகர் ஐக்கியமாகி விடுகிறார் என்பதை சுட்டிக் காட்டவே விநாயகர் சிலைகளை கடலில் கரைப்பதாக ஐதீகம்.

Similar News