ஆன்மிகம்

வாடிப்பட்டியில் ஆரோக்கிய அன்னை தேர்பவனி திரளான கிறிஸ்தவர்கள் பங்கேற்பு

Published On 2016-09-10 06:19 GMT   |   Update On 2016-09-10 06:19 GMT
தென்னகத்து வேளாங்கன்னி என்று போற்றப்படும் வாடிப்பட்டி ஆரோக்கிய அன்னை திருத்தலத்தின் திருவிழா சிறப்பாக நடைபெற்றது.
தென்னகத்து வேளாங்கன்னி என்று போற்றப்படும் வாடிப்பட்டி ஆரோக்கிய அன்னை திருத்தலத்தின் திருவிழா கடந்தமாதம் 29-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

முதல்நாள் உதகை மறை மாவட்ட மேதகு ஆளுநர் அமல்ராஜ் தலைமையில் அன்னையின் கொடியேற்றமும் சிறப்பு திருப்பலியும் நடந்தது.

இதன் முக்கிய விழாவான ஆரோக்கிய அன்னையின் தேர்பவனி நேற்று இரவு நடந்தது. அலங்காரவளைவு களுடன் கூடிய வண்ண விளக்குகள், மலர்களால் அலங்கரிக்கப்பட்ட ரதத்தில் பச்சைபட்டு உடுத்தி மாதா பவனி வந்தார். இதில் ஆயிரக்கணக்கானோர் சாலையின் இருபுறமும் மாதாவின் தேர் முன்பாக வழிபாட்டு பாடல்கள் பாடிய படி நடந்து சென்றனர்.

வாடிப்பட்டி ஆரோக்கிய அன்னை திருத்தலத்திலிருந்து புறப்பட்டு வி.ஏ.ஓ அலுவலகம், குலசேகரன் கோட்டைபிரிவு, கள்ளர் மடம், போடிநாயக்கன்பட்டி பிரிவு, ராமநாயக்கன்பட்டி, பொட்டுலுப்பட்டி பிரிவு, சந்தைபாலம், பேட்டைபுதூர், லாலாபஜார், பஸ்நிலையம், போஸ்ட்ஆபிஸ், ஆர்.ஜ. ஆபீஸ், கச்சைகட்டி சாலை, ஜெமினிபூங்கா, போலீஸ் நிலையம், யூனியன் ஆபீஸ் பிரிவு, பத்திரஆபீஸ், ஆர்.டி.ஓ. ஆபிஸ், நீதிமன்றம் வரை சென்றுவிட்டு மெயின்ரோடு வழியாக வந்தது.

நேற்று இன்று (9-ந்தேதி) காலை 6.30 மணிக்கு ஆரோக்கிய அன்னையின் திருக்கொடி பங்குதந்தை ஆரோக்கியதாஸ் தலைமையில் இறக்கப்பட்டு நன்றி திருப்பலியுடன் விழா நிறைவு பெற்றது.

Similar News