ஆன்மிகம்

மேச்சேரி சாமராஜபேட்டை சக்தி மாரியம்மன் திருவிழாவையொட்டி தீ மிதி விழா

Published On 2016-08-05 05:24 GMT   |   Update On 2016-08-05 05:24 GMT
மேச்சேரி சாமராஜபேட்டை சக்தி மாரியம்மன் திருவிழாவையொட்டி தீ மிதி விழா நேற்று சிறப்பாக நடைபெற்றது.







சேலம் மாவட்டம் மேச்சேரி சாமராஜ பேட்டையில் உள்ள சக்தி மாரியம்மன் கோவில் திருவிழா கடந்த மாதம் 19-ந் தேதி பூச்சாட்டுதலுடன் தொடங்கியது.

27-ந்தேதி அதிகாலை கம்பம் நடுதல் நிகழ்ச்சியும், காலை 10 மணிக்கு அம்மனுக்கு திருக்கல்யாண உற்சவமும் நடந்தது. பின்பு முனியப்பன் கோவிலில் பூஜையும், 2 -ந்தேதி (செவ்வாய்க்கிழமை) காலை 8 மணிக்கு சக்தி அழைத்தல் நிகழ்ச்சியும், 10-ம் ஆண்டு தீர்த்தகுட ஊர்வலமும் நடைபெற்றது.

நேற்று முன்தினம் மாலையில் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக தீ மிதி விழா நடை பெற்றது. இதில் திரளான பெண்களும், ஆண்களும் கைக்குழந்தைகளுடன் தீ மிதித்தனர். பின்பு மாவிளக்கு எடுத்தல் நிகழ்ச்சியும் நடைபெற்றது. இரவு நகைச்சுவை இன்னிசை பாட்டு பட்டிமன்றம் நடைபெற்றது. நேற்று காலை 10 மணிக்கு பொங்கல் வைத்தனர். நேற்று மாலை அக்கினி கரகம், பூங்கரகம் எடுத்தலும், அலகு குத்துதல், வண்டி வேடிக்கை நிகழ்ச்சியும் நடக்கிறது.

இன்று (5- ந்தேதி) இரவு சக்தி மாரியம்மனுக்கு மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட புஷ்ப பல்லக்கில், விசே‌ஷ நாதஸ்வர இன்னிசையுடன் திருவீதி உலா மற்றும் சத்தாபரணம் நிகழ்ச்சி நடைபெறுகிறது. 6-ந்தேதி மஞ்சள் நீராட்டம் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

Similar News