ஆன்மிகம்
சிவபெருமான்

திருமந்திரத்தின் ஒரு பாடலும்... விளக்கமும்...

Published On 2021-10-26 13:39 IST   |   Update On 2021-10-26 13:39:00 IST
திருமந்திரம் நூல், சிவனைப் பற்றியும், அவரை அடையும் வழிமுறை பற்றியும், அவரின் குணங்கள் பற்றியும் மட்டுமல்லாது, உடலில் இயக்கங்கள், விஞ்ஞானம், பகுத்தறிவு உள்ளிட்ட பல பாகங்களையும் அலசி ஆராய்கிறது
பன்னிரு திருமுறைகளில், 10-ம் திருமுறையாக தொகுக்கப்பட்ட நூல், ‘திருமந்திரம்.’ திருமூலர் என்னும் மிகப்பெரிய ஞானியால் எழுதப்பட்ட மூவாயிரம் பாடல்கள் இந்த திருமந்திரத்தில் அடங்கியிருக்கிறது. இந்த நூல், சிவனைப் பற்றியும், அவரை அடையும் வழிமுறை பற்றியும், அவரின் குணங்கள் பற்றியும் மட்டுமல்லாது, உடலில் இயக்கங்கள், விஞ்ஞானம், பகுத்தறிவு உள்ளிட்ட பல பாகங்களையும் அலசி ஆராய்கிறது. இந்த நூலில் இருந்து வாரம் ஒரு பாடலையும், அதற்கான விளக்கத்தையும் பார்த்து வருகிறோம். அந்த வகையில் இந்த வாரத்திற்கான பாடலும், விளக்கமும் இங்கே..

பாடல்:-

உயர்ந்தும் பணிந்தும் முகந்தும் தழுவி

வியந்தும் அரன்அடிக்கே முறை செய்மின்

பயந்தும் பிறவிப் பயனது ஆகும்

பயந்து பரிக்கில் அன்பான்மையன் ஆமே.

விளக்கம்:-

இறைவனை வணங்கும் நெறிமுறையால் மேம்பட்டும், இறைவனைப் பணிந்தும், அந்தப் பணிவில் மனம் மகிழ்ந்தும், ஐந்தெழுத்து மந்திரமான நமசிவாய என்ற சொல்லை அகத்தில் நிலைநிறுத்தி சிவபெருமானுக்கு தொண்டு செய்யுங்கள். அதோடு இந்தப் பிறவிக்கு அஞ்சி, இறைவனை தொழுது வந்தால், அது பெரும் பயனைத் தரும். உள்ளத்தில் பயபக்தியோடு இறைவனை வழிபட்டு, சைவ நெறியை பின்பற்றும்போது, சிவத்தோடு ஒன்றலாம்.

Similar News