ஆன்மிகம்

பிரகாசமான எதிர்காலம் அமைய சூரியனை வணங்குங்கள்

Published On 2016-12-14 08:55 GMT   |   Update On 2016-12-14 08:55 GMT
பிரகாசமான எதிர்காலம் அமைய உலகிற்கு ஒளிகொடுக்கும் கடவுளான சூரிய பகவானை அதிகாலை நேரம் வழிபடுவது மிகவும் முக்கியம்.
சூரிய தேவனை வணங்குவதை ‘சூரிய நமஸ்காரம்’ என்று சொல்வார்கள். உலகிற்கு ஒளிகொடுக்கும் கடவுளான சூரிய பகவானை அதிகாலை நேரம் வழிபடுவது மிகவும் முக்கியம்.

சிவபூஜை செய்பவர் களும் சூரியனை வழிபடுவர். சூரியனின் 12 திருப்பெயர்களைச் சொல்லி 12 முறை விழுந்து வணங்குவர். உபதேசம் பெறாதவர்கள் உடம்பைத் தூய்மை செய்துகொண்டபிறகு கிழக்குத் திசைப் பார்த்து ‘ஓம் நமோ ஆதித்தயாய புத்திர் பலம் தேஹிமே’ என்று சொல்லி மூன்று முறை வணங்க வேண்டும்.

முறைப்படி சூரிய நமஸ்காரம் தொடர்ந்து செய்து வந்தால் கண் பார்வை பலம் பெறும். இதயம் பலப்படும். நோயும் பிணியும் விலகும். அறிவு வளம்பெருகும். சரும நோய்கள் விலகும், சுகமும் சந்தோஷமும் வந்து சேரும். எனவே சூரியனை வழிபட்டு சுகங்களை நாம் பெறுவோம்.

Similar News