ஆன்மிகம்

கடனை விரைவில் தீர்க்கும் கணபதி பரிகாரம்

Published On 2016-09-22 04:58 GMT   |   Update On 2016-09-22 04:59 GMT
வாங்கிய கடனை விரைவில் திருப்பி கொடுக்க கணபதிக்கு செய்ய வேண்டிய பரிகார முறைகளை கீழே பார்க்கலாம்.
நமது நாட்டில் 90 சதவீதம் பேர் கடனோடு தான் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். வாங்கிய கடனை திருப்பி கொடுக்க பலரும் படும்பாடு மிகவும் வேதனையானது.

கடனை கொடுக்க வேண்டும் என்ற எண்ணம் நமக்குள் எப்போது தோன்றுகிறதோ அப்போதே அந்த கடன் சிறிது சிறிதாய் அடைந்து விடும். அந்த எண்ணம் வர நாம் விநாயகரை வணங்க வேண்டும்.

இரண்டு கரங்களால் நீ பட்ட கடனை நான்கு கரங்களுடன் ஓடி வந்து காப்பாற்ற வடிவம் கொண்டவர் ருண ஹரண கணபதி. வெண்பளிங்கு நிறம் கொண்டு அமர்ந்த கோலத்தில் காட்சியளிக்கும் இவரிடம்,

“ஓம் கணேசாய ருணம்
சிந்தி வரேண்யம்
ஹம் நம்; பட்ஸ்வாஹா” 

என்று கடன் நிவர்த்தி அடைய தினமும் ஒன்பது முறை கூறி வழிபட வேண்டும்.

“ஓம் க்லௌம் க்ரோம்
கணேசாய ருணம் சிந்தி
வரேண்யம் ஹம் நம், பட் ஸ்வாஹா” 

என எல்லா கடன்களுக்கும் ருண நாசன கணபதியை வணங்கிட வேண்டும்.

சனிக்கிழமைகளில் சதுர்த்தி வரும் நாளில் முதலில் கடன் கொடுக்க வேண்டிய தொகையில் இருந்து சிறிதளவு கொடுக்க ஆரம்பிக்க வேண்டும். கடன் எவ்வளவு அதிகமாக இருந்தாலும் முழுவதும் விரைவில் தீர்ந்து விடும்.

மூல நட்சத்திரம் வரும் நாளில் அருகம்புல் மாலை அணிவித்து வில்வத்தால் அர்ச்சனை செய்து விநாயகரை வழிபட்டால் கடனை திருப்பி கொடுத்தல் தடையின்றி நிறைவேறும்.

அஸ்த நட்சத்திர நாளில் அரிசி மாவு கொண்டு அரச மரத்தடி விநாயகரை அபிஷேகம் செய்து கடன் கொடுக்க ஆரம்பித்தால் கடன் அடைய வாய்ப்புகள் அதிகம் உருவாகும்.

Similar News