ஆன்மிகம்

தடைகளை உடைத்து பலன்கள் அள்ளித் தரும் சந்திர தோஷ பரிகாரம்

Published On 2016-09-16 06:10 GMT   |   Update On 2016-09-16 06:10 GMT
தடைகளை உடைத்து பலன்கள் அள்ளித் தரும் சந்திர தோஷ பரிகாரம் என்னவென்று கீழே பார்க்கலாம்.
உடல் துர்நாற்றம், வயிறு உப்பசம், சிறுநீர்க் குறைவு, கிருமிகளின் தொற்று, சர்க்கரை நோய், வெள்ளைப்பாடு, தொண்டை குரல் வளைப்புண், பல் ஆடுதல், மண்ணீரல் வீக்கம், சளி, இருமல், ஆஸ்துமா, கரப்பான், தோல் நோய், போன்றவையாகும்.
 
சந்திரன் வழிபாடு:
 
உத்திராடம் நட்சத்திரக்காரர்கள் சந்திரனை வழிபட்டால் சகல யோகங்கள் பெறலாம். சந்திரன் தட்சனின் மகள்களான கிருத்திகை, ரோகிணி, முதலான, 27 பெண்களை மணந்து கொண்டான். அவர்களில் ரோகிணியின் மீது மட்டும் கூடுதலாக அன்பு செலுத்தினான்.
 
இதனால் வருந்திய மற்ற மனைவியர், தந்தை தட்சனிடம் சந்திரன், தங்களைப் புறக்கணிப்பதாகக் கூறினார். இதனால் கோபம் கொண்ட தட்சன் சந்திரனின் கலைகள், தேயும் படியாக சபித்து விட்டான். இந்த சாபத்திற்கு விமோசனம் வேண்டி சந்திரன் பூலோகத்தில் பல தலங்களில் சிவனை பூஜித்து வழிபட்டான்.
 
சந்திரதோஷம் உள்ளவர்கள் இவ்விரதத்தை அனுஷ்டித்தால் தோஷம் நீக்கப் பெறுவார்கள். சிவன் கோவில்களில் நவக்கிரகங்களை வணங்கி சந்திர பகவான் முன் நின்று
 
அலைக்கடல அதனில் நின்றும் அன்று வந்துதித்த போது
கலைவளர் திங்களாகிக் கடவுளென் றெவரும் ஏத்தும்
சிலைமுதல் உமையாள் பங்கன் செஞ்சடைப் 
பிறையாய்மேரு மலைவலமாகவந்த மதியமே போற்றி போற்றி!
 
என்று தோத்திரம் சொல்லி வணங்குபவர்கள் ஆயுள் விருத்தியும் சகல செல்வ போகங்களும் பெறுவார்களென்று சொல்லப்படுகிறது.

Similar News