கிரிக்கெட்
ஆஷஸ் 3-வது டெஸ்ட்: முதல் ஓவரிலேயே விக்கெட்டை இழந்த டேவிட் வார்னர்- வீடியோ
- டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
- முதல் ஓவரின் முதல் பந்தில் டேவிட் வார்னர் பவுண்டரி விளாசினார்.
ஹெட்டிங்லே:
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் பர்மிங்காம் மற்றும் லண்டன் லார்ட்சில் நடந்த முதல் இரு டெஸ்டில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்று தொடரில் 2-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.
இந்த நிலையில் இரு அணிகளுக்கு இடையிலான 3-வது டெஸ்ட் போட்டி லீட்சில் உள்ள ஹெட்டிங்லேயில் இன்று தொடங்கியது. அதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.
அதன்படி ஆஸ்திரேலியா அணியின் தொடக்க வீரர்களாக டேவிட் வார்னர்- கவாஜா களமிறங்கினர். முதல் பந்தையே பவுண்டரிக்கு விரட்டிய வார்னர் 5-வது பந்தில் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.