சினிமா

கலைஞர் கருணாநிதிக்கு புகழஞ்சலி செலுத்துவதே சரி - சிவகார்த்திகேயன் பேட்டி

Published On 2018-08-08 03:56 GMT   |   Update On 2018-08-08 03:56 GMT
ராஜாஜி அரங்கத்தில் வைக்கப்பட்டுள்ள திமுக தலைவர் கருணாநிதி உடலுக்கு அஞ்சலி செலுத்திய பிறகு பேசிய சிவகார்த்திகேயன் கருணாநிதிக்கு புகழஞ்சலி செலுத்துவதே சரி என்று கூறினார். #Karunanidhi #RIPKarunanidhi #கருணாநிதி #RIPkalaingar
சென்னை:

காவேரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த திமுக தலைவர் கருணாநிதி நேற்று மாலை காலமானார். ராஜாஜி ஹாலில் வைக்கப்பட்டுள்ள அவரது உடலுக்கு அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் மற்றும் பொதுமக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

இன்று காலை ராஜாஜி அரங்கத்திற்கு நேரில் வந்து அஞ்சலி செலுத்திய பின்பு செய்தியாளர்களை சந்தித்த நடிகர் சிவகார்த்திகேயன் பேசியதாவது,

முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் ஐயா, தமிழகம் மட்டுமில்லாமல், இந்தியா, ஏன் உலக அரசியலில் ஒப்பற்ற தலைவர். அவருக்கு இந்த நேரத்தில் புகழஞ்சலி செலுத்துவது தான் சரியானது. அவருடைய சாதனையை இதுவரை யாரும் செய்ததில்லை, இனியும் யாரும் செய்யப் போவதில்லை. தமிழ், கலை, இலக்கியம், அரசியல் இவையெல்லாம் இருக்கும் வரை ஐயாவுடைய பெயரும், புகழும் எப்பொழுதும் ஒளிவீசிக் கொண்டே தான் இருக்கும். 95 ஆண்டுகளாக ஓயாமல் உழைத்த சூரியன், இன்று ஓய்வெடுக்கச் சென்றுள்ளது. அவரது உடல் மட்டுமே ஓய்வெடுக்கிறது. அவரது கதிர்வீச்சுகள் இனிவரும் அரசியலும், தமிழும் நிறையவே பேசும் என நினைக்கிறேன். ஐயாவுக்கு எனது புகழஞ்சலி. என்று குறிப்பிட்டார். #Karunanidhi #RIPKarunanidhi #கருணாநிதி #RIPkalaingar #Sivakarthikeyan

சிவகார்த்திகேயன் பேசிய வீடியோ:

Tags:    

Similar News