search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கருணாநிதி மறைவு"

    திமுக முன்னாள் தலைவரும், முன்னாள் முதல்வருமான கருணாநிதியின் புகழஞ்சலி கூட்டம் சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது. #KarunanidhiCondolenceMeeting
    சென்னை:

    திமுக முன்னாள் தலைவரும், முன்னாள் முதல்வருமான கருணாநிதி கடந்த 7-ம் தேதி வயோதிகம் காரணமாக சென்னையில் காலமானார்.
                    
    அவரது மறைவையொட்டி அவருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் தமிழகம் முழுவதும் ஆங்காங்கே நினைவேந்தல் கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. திருச்சி, மதுரை, கோவை, நெல்லை ஆகிய இடங்களில் புகழஞ்சலி கூட்டங்கள் நடந்தன.

    இதையடுத்து, தெற்கில் உதிக்கும் சூரியன் என்ற தலைப்பில் அகில இந்திய தலைவர்கள் பங்கேற்கும் புகழஞ்சலி கூட்டம் சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்திற்கு திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகன் தலைமை தாங்குகிறார். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலை வகிக்கிறார்.

    இந்த புகழஞ்சலி கூட்டத்தில் முன்னாள் பிரதமர் தேவகவுடா, பாஜக சார்பில் மத்திய மந்திரி நிதின் கட்காரி, தேசிய செயலாளர் முரளிதரராவ், காங்கிரஸ் கட்சி சார்பில் குலாம்நபி ஆசாத் எம்.பி., தேசிய மாநாட்டு கட்சி தலைவர் பரூக் அப்துல்லா, பீகார் முதல் மந்திரி நிதிஷ்குமார், புதுச்சேரி முதல் மந்திரி நாராயணசாமி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி, இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் பொதுச்செயலாளர் எஸ்.சுதாகர்ரெட்டி, திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. டெரிக் ஓ பிரையன் உள்பட பலர் மறைந்த திமுக தலைவர் கருணாநிதிக்கு புகழஞ்சலி செலுத்தும் விதமாக சிறப்புரையாற்ற உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. #KarunanidhiCondolenceMeeting
    மறைந்த திமுக தலைவர் கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் பிரபல மணல் சிற்பி சுதர்சன் பட்நாயக் பூரி கடற்கரையில் கருணாநிதியின் உருவம் பதிந்த மணல் சிற்பத்தை உருவாக்கியுள்ளார். #SudarsanPattnaik #Karunanidhi #DMK #RIPKalaignar
    புவனேஷ்வர் :

    ஒடிசா மாநிலத்தை சேர்ந்த மணற்சிற்ப கலைஞர் சுதர்சன் பட்நாயக், நாட்டில் நடக்கும் மகிழ்ச்சியான சம்பவங்கள் மற்றும் துக்க நிகழ்வுகளை பூரி கடற்கரையில் மணல் சிற்பங்களாக செதுக்கி மக்களின் மனங்களிலும் தாக்கத்தை உண்டாக்கி வருகிறார்.

    இந்நிலையில், தமிழகத்தின் பேராளுமையும், இந்தியாவின் மிக மூத்த அரசியல் தலைவருமான கருணாநிதியின் மறைவை தொடர்ந்து அவருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில்  கருணாநிதியின் உருவம் பதிந்த மணல் சிற்பத்தை பூரி கடற்கரையில் சுதர்சன் பட்நாயக் உருவாக்கியுள்ளார்.

    அதில், 1924-2018ஆம் ஆண்டை குறிப்பிட்டு ஜாம்பவான் கருணாநிதிக்கு அஞ்சலி என்ற வாசகத்துடன் அவர் வரைந்துள்ள மணற்சிற்பம் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தன. #SudarsanPattnaik #Karunanidhi #DMK #RIPKalaignar
    நேரு பிரதமராக இருந்த 1957-ம் ஆண்டில் தமிழக சட்டசபைக்குள் நுழைந்த கருணாநிதி மறையும் வரை சட்டமன்ற உறுப்பினராக இருந்துள்ளார் என்பது தனிப்பட்ட சிறப்பம்சமாகும். #Karunanidhideath #MarinaBeach #Karunanidhi #DMK #RIPKalaignar
    சென்னை:

    திராவிட முன்னேற்ற கழகம் தொடங்கப்பட்ட பின்னர் முதல் பலப்பரீட்சையாக 1957-ம் ஆண்டு அக்கட்சி சந்தித்த பொதுத்தேர்தலில் கருணாநிதி, குளித்தலை தொகுதியில் போட்டியிட்டு வென்று சட்டசபைக்குள் நுழைந்தார். அப்போது நாட்டின் பிரதமராக நேரு இருந்தார்.

    நேருவுக்கு பிறகு லால் பகதூர் சாஸ்திரி, இந்திரா காந்தி, மொராஜி தேசாய், சரண் சிங், ராஜிவ் காந்தி, விபி சிங், சந்திரசேகர், நரசிம்ம ராவ், தேவே கவுடா, குஜ்ரால், வாஜ்பாய், மன்மோகன்சிங், மோடி என 13 பிரதமர்களையும் பார்த்துள்ள கருணாநிதி திரூவாரூர் சட்டமன்ற உறுப்பினராகவே மறைந்துள்ளார்.

    60 ஆண்டுகள் சட்டமன்ற உறுப்பினராக இருந்த கதாநாயகன் கருணாநிதியை தவிர இந்த சாதனையை யாராலும் செய்திருக்க வாய்ப்பு இல்லை. 
    மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் உடல் பல்லாயிரக்கணக்கான உடன் பிறப்புக்களின் கண்ணீர் கடலுக்கு மத்தியில் மெரினாவுக்கு ஊர்வலமாக கொண்டு செல்லப்படுகிறது. #RIPKarunanidhi #Marina4Karunanidhi #KarunanidhiFuneral
    சென்னை :

    திமுக தலைவர் கருணாநிதியின் இறுதி ஊர்வலம் தொடங்கி நடைபெற்று வருகிறது. மலர்களால் அலங்கரிக்கப்பட ராணுவ வாகனத்தில் அண்ணா சாலை, சிவானந்தா சாலை, வாலாஜா சாலை வழியாக  மெரினாவுக்கு  கருணாநிதியின் உடல்  ஊர்வலமாக எடுத்து செல்லப்படுகிறது.

    இந்தியாவின் 14 பிரதமர்களுடனும் அரசியல் பயணம் செய்த கருணாநிதியின் இறுதி பயணம் மக்கள் கடலுக்கு இடையே, வங்கக் கடல் நோக்கி சென்றது. சாலையின் இருபுறங்களிலும் பல்லாயிரக்கணக்கான மக்கள் மற்றும் தொண்டர்கள் திரண்டு நின்று கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர்.

    இதனால், எழிலகம் முதல் நேப்பியர் பாலம் வரை உள்ள காமராஜர் சாலையில் அலை கடல் என வழி எங்கும் வாழ்த்து முழக்கங்களுடன் மக்கள் கூட்டம் நிரம்பி உள்ளது.பாதுகாப்புக்காக சாலையில் இரு புறங்களிலும் காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.  #RIPKarunanidhi #Marina4Karunanidhi #KarunanidhiFuneral
    திமுக தலைவர் கருணாநிதியின் இறுதி ஊர்வலம் இன்னும் சற்று நேரத்தில் தொடங்க உள்ள நிலையில் ராஜாஜி அரங்கத்தில் பொதுமக்கள் அஞ்சலி செலுத்துவது நிறைவடைந்துள்ளது. #RIPKarunanidhi #Marina4Karunanidhi #KarunanidhiFuneral
    சென்னை :

    திமுக தலைவர் கருணாநிதியின் இறுதி ஊர்வலம் மாலை 4 மணியளவில் நடைபெறுகிறது. கருணாநிதியின் உடலை ஊர்வலமாக கொண்டுசெல்வதற்காக அலங்கரிக்கப்பட்ட ராணுவ வாகனம் ராஜாஜி அரங்கத்திற்கு கொண்டுவரப்பட்டது.

    கருணாநிதியின் உடல் அண்ணா சாலை, சிவானந்தா சாலை, வாலாஜா சாலை வழியாக ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு மெரினாவில் அண்ணா சமாதிக்கு பின்புறத்தில் அடக்கம் செய்யப்படவுள்ளது.

    கருணாநிதியின் உடல் வைக்கப்பட்டுள்ள ராஜாஜி ஹாலில் அஞ்சலி செலுத்துவதற்காக லட்சக்கணக்கான தொண்டர்களும் பொதுமக்களும் திரண்டு கூட்டம் அதிகரித்ததால் அங்கு தள்ளுமுள்ளு ஏற்பட்டது. சில இடங்களில் நெரிசலும் ஏற்பட்டது. சிலர் படிக்கட்டு வழியாக ஏறி, கருணாநிதி உடலைப் பார்க்க முயன்றதால் ஒரு கட்டத்தில் போலீஸ் லேசான  தடியடியும் நடத்தும் அளவுக்கு நிலைமை மோசமானது.

    இதைத்தொடர்ந்து, மு.க.ஸ்டாலின் உடனடியாக தொண்டர்களிடையே மைக்கில் பேசினார். கருணாநிதியின் மறைவு, அவரை நல்லடக்கம் செய்வதற்கு ஏற்பட்ட தடைகள் குறித்து உணர்ச்சிப்பூர்வமாக பேசிய அவர், கலவரம் ஏற்பட இடம் தராமல் அமைதியாக கலைந்துசெல்லும்படி தொண்டர்களிடம் கூறியதை தொண்டர்ந்து அங்கு மக்கள் கூட்டம் குறைய தொடங்கியுள்ளது.

    இதனால், திமுக தலைவர் கருணாநிதிக்கு ராஜாஜி அரங்கத்தில் பொதுமக்கள் அஞ்சலி செலுத்துவது நிறைவடைந்துள்ளது. கருணாநிதியின் இறுதி ஊர்வலம் இன்னும் சற்று நேரத்தில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. #RIPKarunanidhi #Marina4Karunanidhi #KarunanidhiFuneral
    மறைந்த திமுக தலைவர் கருணாநிதிக்கு மெரினாவில் இடம் ஒதுக்க சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டதற்கு எதிராக டிராபிக் ராமசாமி சுப்ரீம் கோர்ட்டில் முறையிட்ட நிலையில், சுப்ரீம் கோர்ட் மறுப்பு தெரிவித்துள்ளது. #Karunanidhideath #DMK
    புதுடெல்லி:

    திமுக தலைவர் கருணாநிதி நேற்று மாலை மரணமடைந்த நிலையில், அவரது உடலை அடக்கம் செய்ய மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா நினைவிடம் அருகே திமுக சார்பில் இடம் கோரப்பட்டது. ஆனால், அரசு அதனை மறுத்து கிண்டியில் உள்ள காமராஜர் மண்டபத்தில் இடம் ஒதுக்குவதாக அறிவித்தது.

    அரசின் அறிவிப்பை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் திமுக முறையிட்டது. இந்த மனுவை இன்று விசாரித்த பொறுப்பு தலைமை நீதிபதி அமர்வு மெரினாவில் இடம் ஒதுக்க உத்தரவிட்டது. ஐகோர்ட் உத்தரவுக்கு எதிராக டிராபிக் ராமசாமி சுப்ரீம் கோர்ட்டில் முறையிட்டார்.

    ஆனால், சென்னை ஐகோர்ட் உத்தரவை ரத்து செய்ய மறுத்த சுப்ரீம் கோர்ட், கருணாநிதியின் இறுதி சடங்குக்கு தடை விதிக்க மறுத்து விட்டனர். மனுவாக தாக்கல் செய்யவும் நீதிபதிகள் அவரை அறிவுறுத்தினர். #Karunanidhideath #DMK #SupremeCourt
    திமுக தலைவர் கருணாநிதியின் உடலுக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, புதுவை முதல்வர் நாராயணசாமி, கர்நாடக முதல்வர் குமாரசாமி உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் அஞ்சலி செலுத்தினர். #Karunanidhidath #RIPKarunanidhi #dmk #rajajihall
    சென்னை:

    திமுக தலைவரும் தமிழக முன்னாள் முதல்வருமான கருணாநிதி நேற்று மாலை காலமானார். அவரது உடல் ராஜாஜிஅரங்கத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. அவரது உடலுக்கு பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள், முக்கிய பிரமுகர்கள், திரையுலக பிரமுகர்கள் மற்றும் கட்சி தொண்டர்கள், பொதுமக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். 

    பிரதமர் நரேந்திர மோடி, கர்நாடக முதல்வர் குமாரசாமி, துணை முதலமைச்சர் பரமேஸ்வரா, புதுவை முதல்வர் நாராயணசாமி, டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், கர்நாடக முன்னாள் முதல்வர் சித்தாமையா, உத்தர பிரதேச முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவ், லாலு பிரசாத் யாதவின் மகன் தேஜஸ்வி யாதவ் ஆகியோர் கருணாநிதி உடலுக்கு நேரில் வந்து அஞ்சலி செலுத்தினர்.

    இந்நிலையில் காங்கிரஸ் தலைவர்  ராகுல் காந்தி பிற்பகல் 2.20 மணியளவில் ராஜாஜி ஹாலுக்கு வந்து கருணாநிதி உடலுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். 

    கருணாநிதியின் உடல் ராஜாஜி ஹாலில் இருந்து ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு, சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா சமாதி அருகே அடக்கம் செய்யப்படுகிறது. இதற்கான ஏற்பாடுகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.  #Karunanidhidath #RIPKarunanidhi #dmk #rajajihall
    சென்னை மெரினா கடற்கரையில் கருணாநிதி உடலை அடக்கம் செய்ய இடம் ஒதுக்கும்படி தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. #RIPKarunanidhi #Karunanidhi #Marina4Karunanidhi
    சென்னை:

    திமுக தலைவர் கருணாநிதியை சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா சமாதி அருகே அடக்கம் செய்ய அனுமதிக்க வேண்டும் என திமுக தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால், மெரினாவில் நினைவிடம் ஒதுக்குவதில் பல சட்ட சிக்கல்கள் உள்ளதால், சென்னை காந்தி மண்டபம் அருகே 2 ஏக்கர் நிலம் ஒதுக்க அரசு தயாராக இருப்பதாக தலைமை செயலாளர் அறிவித்தார். 

    தமிழக அரசின் அறிவிப்புக்கு எதிராக சென்னை ஐகோர்ட் பொறுப்பு தலைமை நீதிபதி ஹுலுவாடி ரமேஷிடம் திமுக சார்பில் முறையிடப்பட்டது. இந்த மனு மீது இன்று விசாரணை நடைபெற்றது. அப்போது அரசுத் தரப்பு மற்றும் திமுக தரப்பு வழக்கறிஞர் காரசாரமாக வாதிட்டனர்.

    அப்போது சட்ட சிக்கல்கள், வலுக்கு நிலுவை என்றீர்கள்? இப்போது வழக்குகள் இல்லாததால்எதிர்ப்பது ஏன்? என அரசுத் தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். காமராஜருக்கு நினைவிடம் அமைக்க மெரினாவில் இடம் கோரவில்லை என்றும், ஜானகியம்மாள் இறந்தபோதும் முறையான அனுமதி கோரப்படவில்லை என்றும் நீதிபதிகள் கூறினர். 

    எனினும் பல்வேறு காரணங்களைக் கூறிய அரசுத் தரப்பு வழக்கறிஞர், கருணாநிதிக்கு மெரினாவில் இடம் ஒதுக்க முடியாது என தொடர்ந்து பிடிவாதம் செய்தார். திமுக தரப்பும் எதிர்வாதம் செய்தது.

    இரு தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதிகள் வாசித்தனர். அப்போது, திமுக தலைவர் கருணாநிதியின் உடலை அடக்கம் செய்ய மெரினாவில் இடம் ஒதுக்கும்படி தமிழக அரசுக்கு உத்தரவு பிறப்பித்தனர். #RIPKarunanidhi #Karunanidhi #Marina4Karunanidhi
    ×