சினிமா செய்திகள்

விஜய்

null

இடைவெளியில் படம் பார்த்த விஜய்.. வைரலாகும் புகைப்படம்..

Published On 2022-08-16 13:58 GMT   |   Update On 2022-08-16 14:22 GMT
  • இயக்குனர் வம்சி பைடிப்பள்ளி இயக்கத்தில் விஜய் நடித்து வரும் படம் வாரிசு.
  • வாரிசு படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

வம்சி பைடிப்பள்ளி இயக்கத்தில் விஜய் நடித்து வரும் படம் வாரிசு. இப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் நேரடியாக வெளியாக உள்ளது. இதில் விஜய்க்கு ஜோடியாக ரஷ்மிகா மந்தனா நடித்து வருகிறார். மேலும், பிரகாஷ்ராஜ், சரத்குமார், குஷ்பூ, ஷாம், யோகி பாபு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.


வாரிசு

இப்படத்தின் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. மேலும், வாரிசு படத்தின் அப்டேட்களை தொடர்ந்து ரசிகர்கள் சமூக வலைதளத்தில் பதிவிட்டு வருகின்றனர். இந்நிலையில், இப்படத்தின் படப்பிடிப்புக்கு நடுவே நடிகர் விஜய் ஹைதராபாத்தில் உள்ள மகேஷ்பாபுவுக்கு சொந்தமான திரையரங்கில் தெலுங்கு படத்தை பார்த்துள்ளதாக கூறப்படுகிறது.


வாரிசு

இது குறித்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது. இப்படம் 2023- ஆம் ஆண்டு பொங்கலுக்கு திரைக்கு வரவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News