சினிமா செய்திகள்

வாரிசு

கோடிகளை வாரிக்குவிக்கும் வாரிசு.. போஸ்டர் வெளியிட்டு அறிவித்த படக்குழு

Published On 2023-02-06 14:10 GMT   |   Update On 2023-02-06 14:10 GMT
  • இயக்குனர் வம்சி இயக்கத்தில் விஜய் நடித்து வெளியான திரைப்படம் 'வாரிசு'.
  • இப்படத்தின் புதிய வசூல் குறித்த அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது.

வம்சி இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் உருவான திரைப்படம் 'வாரிசு'. இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்திருந்தார். மேலும், பிரகாஷ்ராஜ், சரத்குமார், குஷ்பூ, ஷாம், யோகி பாபு உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.


வாரிசு

பெரும் எதிர்பார்ப்பில் உருவான இப்படம் கடந்த 11-ஆம் தேதி ரசிகர்களின் கொண்டாட்டத்துடன் திரையரங்குகளில் வெளியானது. இதைத்தொடர்ந்து இப்படத்தின் தெலுங்கு பதிப்பான 'வாரசுடு' கடந்த 14-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. 'வாரிசு' படம் வெளியான ஏழு நாட்களில் உலகம் முழுவதும் ரூ.210 கோடி வசூல் செய்துள்ளதாக போஸ்டர் வெளியிட்டு படக்குழு அறிவித்திருந்தது.

 

வாரிசு

இந்நிலையில் வாரிசு படத்தின் புதிய வசூல் குறித்த அறிவிப்பை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அதில், வாரிசு படம் உலக அளவில் ரூ.300 கோடி வசூல் செய்துள்ளதாக படக்குழு போஸ்டர் வெளியிட்டு தெரிவித்துள்ளது. இதனை ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.

Tags:    

Similar News