சினிமா செய்திகள்

வாரிசு

null

வாரிசு வசூல் ரூ.210 கோடி - 200% வாய்ப்பில்லாத ஒன்று.. திருப்பூர் சுப்ரமணியன் அதிரடி!

Published On 2023-01-20 04:29 GMT   |   Update On 2023-01-20 04:32 GMT
  • இயக்குனர் வம்சி இயக்கத்தில் விஜய் நடித்து வெளியான திரைப்படம் 'வாரிசு'.
  • இப்படம் ரூ.210 கோடி வசூல் செய்துள்ளதாக படக்குழு அறிவித்திருந்தது.

வம்சி இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் உருவான திரைப்படம் 'வாரிசு'. இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்திருந்தார். மேலும், பிரகாஷ்ராஜ், சரத்குமார், குஷ்பூ, ஷாம், யோகி பாபு உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

 

வாரிசு


பெரும் எதிர்பார்ப்பில் உருவான இப்படம் கடந்த 11-ஆம் தேதி ரசிகர்களின் கொண்டாட்டத்துடன் திரையரங்குகளில் வெளியானது. இதைத்தொடர்ந்து இப்படத்தின் தெலுங்கு பதிப்பான 'வாரசுடு' கடந்த 14-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. 'வாரிசு' படம் வெளியான ஏழு நாட்களில் உலகம் முழுவதும் ரூ.210 கோடி வசூல் செய்துள்ளதாக போஸ்டர் வெளியிட்டு படக்குழு அறிவித்திருந்தது.


திருப்பூர் சுப்ரமணியன் 

இந்நிலையில் வாரிசு படத்தின் வசூல் குறித்து விநியோகஸ்தர் சங்கத் தலைவர் திருப்பூர் சுப்ரமணியன் கூறியிருப்பது பலரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. அவர் கூறியதாவது, படத்தின் வசூல் என்ன என்பது முழுமையாக தெரிய இன்னும் சில நாட்கள் ஆகும். தமிழ ரிலீஸ் உரிமையை ஒருவரும், ஓவர் சீஸ் உரிமையை மற்றொருவரும் பெற்றனர். வாரிசு வசூல் ரூ.210 கோடி என்பது 200% வாய்ப்பில்லாத ஒன்று என்றார். 

Tags:    

Similar News