சினிமா செய்திகள்

சிபி சத்யராஜ்

சிபி சத்யராஜ் நடிக்கும் வட்டம்.. வைரலாகும் போஸ்டர்..

Update: 2022-06-28 06:50 GMT
  • மயோன் திரைப்படத்தைத் தொடர்ந்து சிபி சத்யராஜ் நடிக்கும் படம் வட்டம்.
  • இந்த படத்தை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிக்கிறது.

நடிகர் சிபி சத்யராஜ் நடிப்பில் இயக்குனர் அருண்மொழி மாணிக்கம் இயக்கத்தில் சமீபத்தில் திரையரங்குகளில் வெளியான மாயோன் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இதைத் தொடர்ந்து, சிபி சத்யராஜ், இயக்குனர் கமலகண்ணன் இயக்கத்தில் கதாநாயகனாக நடித்து வரும் படம் வட்டம். இப்படத்தில் சமுத்திரகனி, ஆண்ட்ரியா, மஞ்சிமா மோகன், அதுல்யா ரவி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள். இப்படத்தை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிக்கிறது.


வட்டம் திரைப்படம் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்

தற்போது இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சமூக வலைதளத்தில் வெளியாகி வைரலாகி உள்ளது. மேலும், இத்திரைப்படம் நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியாக இருப்பதாகவும் விரைவில் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகும் எனவும் படக்குழு தெரிவித்துள்ளது.

Tags:    

Similar News