சினிமா செய்திகள்

பொன்னியின் செல்வன்

null

வருகிறான் சோழன்.. பொன்னியின் செல்வன் அப்டேட்..

Update: 2022-07-02 08:16 GMT
  • இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் "பொன்னியின் செல்வன்-1".
  • "பொன்னியின் செல்வன்-1" திரைப்படத்தில் பிரபலங்கள் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றனர்.

கல்கியின் புகழ் பெற்ற "பொன்னியின் செல்வன்" நாவலை அடிப்படையாகக் கொண்டு இயக்குனர் மணிரத்னம் "பொன்னியின் செல்வன்-1" திரைப்படத்தை இயக்கி வருகிறார். இரண்டு பாகங்களாக உருவாக இருக்கும் இப்படத்தின் முதல் பாகம் வருகிற செப்டம்பர் 30-ஆம் தேதி திரைக்கு வர இருப்பதாக அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகின.

இப்படத்தில் ஜெயம் ரவி, கார்த்தி, விக்ரம், பிரகாஷ்ராஜ், பிரபு, ரகுமான், திரிஷா, ஐஸ்வர்யா ராய் போன்ற பல முன்னணி நடிகர்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படம் தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியாக உள்ளது.


பொன்னியின் செல்வன்

இப்படத்தை லைகா நிறுவனம் வழங்க மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. சமீபத்தில் வெளியான இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில், படக்குழு அப்டேட் ஒன்றை கொடுத்து படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

அதன்படி, வருகிறான் சோழன் என்ற வாசகத்துடன் ஏ.ஆர். ரஹ்மானின் பின்னணி இசையுடன் வீடியோ ஒன்று சமூக வலைதளத்தில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.

Tags:    

Similar News