சினிமா செய்திகள்

தனுஷ்

தனுஷ் கொடுத்த அப்டேட்.. கவனம் ஈர்க்கும் போஸ்டர்..

Update: 2022-06-28 06:02 GMT
  • பார்த்திபன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'இரவின் நிழல்'.
  • இப்படத்திற்கு ஏ.ஆர். ரகுமான் இசையமைத்துள்ளார்.

இயக்குனரும், நடிகருமான பார்த்திபன் இயக்கி நடித்துள்ள திரைப்படம் 'இரவின் நிழல்'. இதில் வரலக்ஷ்மி சரத்குமார், ரோபோ ஷங்கர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

'இரவின் நிழல்' திரைப்படம் நான் லீனியர் திரைக்கதை முறையில் ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்ட உலகின் முதல் படம் என்ற பெருமையை பெற்றுள்ளது. அகிரா புரொடக்ஷன்ஸ் தயாரித்துள்ள இப்படத்திற்கு ஏ.ஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளார்.


இரவின் நிழல் போஸ்டர்

சமீபத்தில் இதன் டிரைலர் மற்றும் பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில், படத்தின் ரிலீஸ் தேதி வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படம் ஜூலை 15-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை நடிகர் தனுஷ் தனது சமூக வலைதளப்பக்கத்தில் ஒரு போஸ்டருன் அறிவித்துள்ளார். இந்த போஸ்டர் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது

Tags:    

Similar News