மாவீரன் படத்துக்காக மாபெரும் விழா.. சிவகார்த்திகேயனின் வேற லெவல் ட்ரீட்
- மடோன் அஸ்வின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள திரைப்படம் ‘மாவீரன்’.
- இப்படத்தின் புதிய அப்டேட்டை படக்குழு கொடுத்துள்ளது.
சிவகார்த்திகேயன் தற்போது 'மண்டேலா' படத்தின் இயக்குனர் மடோன் அஸ்வின் இயக்கத்தில் உருவாகியுள்ள 'மாவீரன்' படத்தில் நடித்துள்ளார். இப்படம் தமிழ், தெலுங்கு ஆகிய 2 மொழிகளில் தயாராகி உள்ளது. இப்படத்திற்கு தெலுங்கில் 'மாவீருடு' என்று பெயர் வைத்துள்ளனர்.
இதில் அதிதி ஷங்கர், சரிதா, இயக்குனர் மிஷ்கின் மற்றும் யோகி பாபு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். 'மாவீரன்' திரைப்படம் வருகிற ஜூலை 14-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளதால் படக்குழு படத்தின் பணிகளில் தீவிரம் காட்டி வருகிறது. சமீபத்தில் 'மாவீரன்' திரைப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கான டப்பிங் பணி நிறைவடைந்ததாக படக்குழு அறிவித்திருந்தது.
இந்நிலையில் மாவீரன் படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி குறித்த அறிவிப்பை வீடியோ வெளியிட்டு படக்குழு அறிவித்துள்ளது. அதன்படி இந்த ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி வருகிற ஜூலை 2ம் தேதி சாய் ராம் பொறியியல் கல்லூரியில் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.