என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "madonne ashwin"

    • இயக்குனர் மடோன் அஸ்வின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் படம் ''மாவீரன்''.
    • இந்த படத்தில் இயக்குனர் மிஷ்கின் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

    'டாக்டர்', 'டான்' படங்களின் வெற்றியைத் தொடர்ந்து 'மண்டேலா' பட இயக்குனர் மடோன் அஸ்வின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் கதாநாயகனாக நடிக்கும் படம் மாவீரன். இப்படத்தில் அதிதி ஷங்கர், சரிதா, இயக்குனர் மிஷ்கின் மற்றும் யோகி பாபு ஆகியோர் முக்கிய கதாபாத்திரல் நடிக்கின்றனர்.


    மாவீரன்

    இதற்கான அறிவிப்பை படக்குழு முன்னதாகவே வெளியிட்டது. இந்நிலையில், இந்த படத்தின் புதிய தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, 'மாவீரன்' திரைப்படத்தில் இயக்குனர் மிஷ்கின் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து வருவதாக கூறப்படுகிறது.


    மாவீரன்

    மேலும், சிவகார்த்திகேயன் மற்றும் மிஷ்கின் இருவருக்குமான காட்சிகள் விரைவில் படமாக்கப்படவுள்ளதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர். 

    • இயக்குனர் மடோன் அஸ்வின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன்நடிக்கும் படம் ''மாவீரன்''.
    • இந்த படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது.

    சிவகார்த்திகேயன் நடித்து வெளியான 'டாக்டர்' மற்றும் 'டான்' ஆகிய இரண்டு திரைப்படங்களும் பாக்ஸ் ஆபிஸில் ரூ.100 கோடி வசூல் செய்து சாதனை படைத்தது. கலவையான விமர்சனங்களை பெற்றாலும் மக்கள் மத்தியில் இந்த இரண்டு திரைப்படங்களும் பெரும் வரவேற்பை பெற்றது.

    இதனை தொடர்ந்து தெலுங்கு இயக்குனர் அனுதீப் இயக்கி வரும் 'பிரின்ஸ்' படத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வருகிறார். இந்த படத்தில் ரியா போஷாப்கா கதாநாயகியாகவும், சத்யராஜ் முதன்மை கதாபாத்திரத்திலும் நடிக்கிறார்கள்.


    மாவீரன்

    இந்த படத்தை தொடர்ந்து 'மண்டேலா' பட இயக்குனர் மடோன் அஸ்வினுடன் இணைந்து புதிய படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கிறார். மாவீரன் என்று பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தின் வீடியோ சமீபத்தில் வெளியாகி வைரலானது. இந்நிலையில், இப்படத்தின் கதாநாயகி குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

    அதன்படி, ''மாவீரன்'' திரைப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக அதிதி சங்கர் நடிக்கவுள்ளார். இதன் அதிகாரப்பூர்வ அறிவிப்பை படக்குழு வீடியோ ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது. அதிதி சங்கரின் "விருமன்" திரைப்படம் ஆகஸ்ட் 12-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

    • இயக்குனர் அனுதீப் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் தற்போது பிரின்ஸ் படத்தில் நடித்து வருகிறார்.
    • 'மண்டேலா' பட இயக்குனர் மடோன் அஸ்வின் இயக்கும் புதிய படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கவுள்ளார்.

    சிவகார்த்திகேயன் நடித்து வெளியான 'டாக்டர்' மற்றும் 'டான்' ஆகிய இரண்டு திரைப்படங்களும் பாக்ஸ் ஆபிஸில் ரூ.100 கோடி வசூல் செய்து சாதனை படைத்தது. கலவையான விமர்சனங்களை பெற்றாலும் மக்கள் மத்தியில் இந்த இரண்டு திரைப்படங்களும் பெரும் வரவேற்பை பெற்றது.


    இதனை தொடர்ந்து தெலுங்கு இயக்குனர் அனுதீப் இயக்கி வரும் 'பிரின்ஸ்' படத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வருகிறார். இந்த படத்தில் ரியா போஷாப்கா கதாநாயகியாகவும், சத்யராஜ் முதன்மை கதாபாத்திரத்திலும் நடிக்கிறார்கள். தமன் இசையமைக்கும் இப்படத்திற்கு மனோஷ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்கிறார். இந்த படத்தை தொடர்ந்து 'மண்டேலா' பட இயக்குனர் மடோன் அஸ்வினுடன் இணைந்து புதிய படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கிறார். இப்படத்தின் அப்டேட் இன்று காலை 10.10 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

    மாவீரன்

    மாவீரன்

    இந்நிலையில் அறிவித்தபடி இப்படத்தின் அறிவிப்பு வீடியோ பதிவின் மூலம் வெளியிடப்பட்டது. இப்படத்திற்கு ரஜினி நடிப்பில் 1986-ஆம் ஆண்டு இயக்குனர் ராஜசேகர் இயக்கத்தில் வெளியான 'மாவீரன்' படத்தின் டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. அந்த வீடியோவில் ரஜினி போன்ற பாவனைகளுடன் சிவகார்த்திகேயன் சண்டையிடும் காட்சிகள் இடம்பெற்றுள்ளது. ரஜினியின் தீவிர ரசிகரான சிவகார்த்திகேயன் அவரின் படத்திற்கு ரஜினி பட பெயரை வைத்திருப்பது பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. 

    ×