சினிமா செய்திகள்

விஜய் தேவரகொண்டா

புதிய புகைப்படங்களை வெளியிட்ட விஜய் தேவரகொண்டா

Published On 2022-08-16 15:10 GMT   |   Update On 2022-08-16 15:10 GMT
  • பூரி ஜெகந்நாத் இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா நடித்துள்ள படம் லைகர்.
  • லைகர் படம் இந்தி, தமிழ், தெலுங்கு என பல மொழிகளில் வெளியாகவுள்ளது.

பூரி ஜெகந்நாத் இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா நடித்துள்ள படம் லைகர். இந்தப் படத்தில் விஜய் தேவரகொண்டா குத்துச்சண்டை வீரராக நடித்துள்ளார். அவருடன் பிரபல குத்துச் சண்டை வீரர் மைக் டைசனும் நடித்திருக்கிறார். மேலும், இப்படத்தில், அனன்யா பாண்டே, ரம்யா கிருஷ்ணன், உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றனர்.


விஜய் தேவரகொண்டா

மிகப்பெரிய பொருட்செலவில் உருவாகியுள்ள இந்தப் படம் தமிழ், தெலுங்கு என பல மொழிகளில் ஆகஸ்ட் 25-ஆம் தேதி வெளியாகவுள்ளது. சமீபத்தில் வெளியான இப்படத்தின் பாடல் மற்றும் டிரைலர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

'லைகர்' திரைப்படம் விரைவில் திரைக்கு வர உள்ள நிலையில் இப்படத்தை இந்தி ரசிகர்களிடம் கொண்டு போய் சேர்க்க, படத்தின் கதாநாயகன் விஜய் தேவரகொண்டாவும், நாயகி அனன்யா பாண்டேவும் பல இடங்களுக்குச் சென்று வருகிறார்கள்.


விஜய் தேவரகொண்டா - அனன்யா பாண்டே

இந்நிலையில், நடிகர் விஜய் தேவரகொண்டா தனது சமூகவலைதளப் பக்கத்தில் கருப்பு நிற உடையில் அனன்யா பாண்டேவுடன் இருக்கும் புதிய புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படங்கள் ரசிகர்களின் மனதை கவர்ந்து வருகிறது.


Tags:    

Similar News