சினிமா செய்திகள்

மாதவன்

null

நான் இன்னும் என் வீட்டில் தான் வாழ்கிறேன் - விளக்கமளித்த நடிகர் மாதவன்

Update: 2022-08-18 05:33 GMT
  • நடிகர் மாதவன் இயக்குனராக அறிமுகமாகியுள்ள படம் 'ராக்கெட்ரி: தி நம்பி எஃபெக்ட்'.
  • இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணனின் கதையை மையமாகக் கொண்டு இப்படம் தயாரிக்கப்பட்டுள்ளது.

பிரபல நடிகர் மாதவன் இயக்குனராக அறிமுகமாகியுள்ள திரைப்படம் 'ராக்கெட்ரி: தி நம்பி எஃபெக்ட்'. இஸ்ரோ ராக்கெட் விஞ்ஞானி நம்பி நாராயணனின் வாழ்க்கையில் நடந்த உண்மைச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்ட இந்த திரைப்படத்தை இயக்குவதோடு மட்டுமல்லாமல் அதில் முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார்.

இப்படம் ஜூலை 1-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. திரைப்பிரபலங்கள் பலர் வாழ்த்து தெரிவித்த நிலையில் 'ராக்கெட்ரி: தி நம்பி எஃபெக்ட்' திரைப்படம்  அதிக வசூல் ஈட்டியது. 


ராக்கெட்ரி: தி நம்பி எஃபெக்ட்

இதனிடையே, 'ராக்கெட்ரி' படத்தை எடுப்பதற்காக மாதவன் தனது வீட்டை விற்றார் என்ற தகவல் சமூக வலைதளத்தில் வைரலானது. இதற்கு விளக்கமளித்துள்ள மாதவன், " நான் எனது வீடு உள்ளிட்ட எதையும் இழக்கவில்லை. உண்மையில் ராக்கெட்ரி படத்தில் பணிபுரிந்தவர்கள் அனைவரும் மிகவும் பெருமையுடன் இந்த ஆண்டு அதிக வருமான வரி செலுத்துவார்கள்.

கடவுளின் அருளால் இந்தப் படத்தால் அனைவரும் நல்ல லாபம் ஈட்டினோம். நான் இன்னும் என் வீட்டில் தான் வாழ்கிறேன்" என்று சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். இந்த பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.


Tags:    

Similar News