சினிமா செய்திகள்
நிக்கி கல்ராணி

ஒரே நாளில் நிக்கி கல்ராணிக்கு கிடைத்த இரட்டிப்பு மகிழ்ச்சி

Update: 2022-05-21 08:06 GMT
தமிழ் சினிமாவில் பல படங்களில் நடித்து முன்னணி நடிகையாக வலம் வந்த நிக்கி கல்ராணிக்கு ஒரே நாளில் இரட்டிப்பு மகிழ்ச்சி அடைந்து இருக்கிறார்.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவர் நிக்கி கல்ராணி. இவருக்கும் நடிகர் ஆதிக்கும் சமீபத்தில் திருமணம் நடைபெற்றது.

அதே தினத்தில் நிக்கி கல்ராணியின் சகோதரி சஞ்சனா கல்ராணி திருமணத்தன்று ஆண் குழந்தையைப் பெற்றெடுத்துள்ளார். சஞ்சனா இரண்டு வருடங்களுக்கு முன்பு ஆசிஷ் பாஷா என்பவரைக் காதல் திருமணம் செய்து கொண்டார்.சஞ்சனா தமிழில் சில படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளார். 2020ம் வருடம் போதைப் பொருள் வழக்கில் கைது செய்யப்பட்டு மூன்று மாதங்கள் சிறையில் இருந்து பின்னர் பெயில் பெற்று வெளியில் வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News