சினிமா செய்திகள்
ராஷ்மிகா மந்தனா

பிரபாசுக்கு ஜோடியாகும் ராஷ்மிகா

Update: 2022-05-15 11:54 GMT
தளபதி 66 படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் நடிகை ராஷ்மிகா மந்தனா, பிரபாஸ் படத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
பிரபாஸ் தனது அடுத்த படத்தின் படப்பிடிப்பை தொடங்கி விட்டார். ராதே ஷியாம் தோல்வியைத் தொடர்ந்து சில வாரங்கள் அமைதியாக குடும்பத்தினருடன் பொழுதைக் கழித்து வந்தார் பிரபாஸ். இதையடுத்து அவரது நெருங்கிய நண்பரான இயக்குனர் நாக் அஸ்வின் சொன்ன ஒரு கதை அவருக்குப் பிடித்து விட, படப்பிடிப்பை உடனே தொடங்க சொல்லியிருக்கிறார் பிரபாஸ். புராஜக்ட் கே என்ற பெயருடன் படப்பிடிப்பு தொடர்ந்து நடந்து வருகிறது. இது முடிந்தவுடன் சந்திரெட்டி வங்கா இயக்கும் ஸ்பிரிட் என்ற படத்தில் நடிக்க இருக்கிறார்.


ராஷ்மிகா மந்தனா

பிரபாசுக்கு விஜய் படங்களில் ஜோடியாக நடிக்கும் நடிகைகளை தன் படங்களில் ஜோடியாக நடிக்க வைக்க வேண்டும்  என்ற ஆசை இருக்கிறது. ராதே ஷியாம் படத்தில் பூஜா ஹெக்டேவை தனக்கு ஜோடியாக்கினார். தற்போது ஸ்பிரிட் படத்தில் ராஷ்மிகா மந்தனாவை நடிக்க வைக்க பேச்சு வார்த்தை நடந்து வருகிறது. விஜய் படத்தின் தேதிகளுக்கு இடையூறு இல்லையென்றால் பிரபாஸ் படத்தில் ராஷ்மிகா நடிப்பார் என்கிறார்கள்.
Tags:    

Similar News