சினிமா செய்திகள்
தளபதி 66

புதிய அப்டேட் கொடுத்த ‘தளபதி 66’ படக்குழு

Update: 2022-05-09 05:34 GMT
பீஸ்ட் படத்தை தொடர்ந்து தற்போது விஜய் நடித்துக் கொண்டிருக்கும் தளபதி 66 படத்தின் புதிய அப்டேட்டை படக்குழு வெளியிட்டுள்ளது.
பீஸ்ட் படத்தின் வெற்றியை தொடர்ந்து தோழா உள்ளிட்ட படங்களை இயக்கிய வம்சி பைடிப்பள்ளி இயக்கும் படத்தில் விஜய் நடித்து வருகிறார். 'தளபதி 66' என்று பெயரிடப்பட்டுள்ள இப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் நேரடியாக வெளியாக உள்ளது. இப்படத்தைப் பிரபல தயாரிப்பாளர் தில் ராஜு தயாரிக்கிறார். இதில் விஜய் ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்து வருகிறார். இப்படம் விஜய்யின் ஆரம்பக் கட்டத்தில் வெளியான பூவே உனக்காக, காதலுக்கு மரியாதை போன்ற குடும்ப பின்னணி படமாக உருவாகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு ஐதராபாத்தில் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.


சரத்குமார் - ஜெயசுதா

இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவுபெற்றுள்ள நிலையில் 2ம் கட்ட படப்பிடிப்பு  ஐதராபாத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதற்காக சமீபத்தில் ஐதராபாத் சென்ற விஜய் பிசியாக நடித்து வருகிறார். இந்தநிலையில் இப்படத்தின் இணைந்துள்ள நடிகர்கள் குறித்து படக்குழு அறிவித்துள்ளது. அதன்படி நடிகர் சரத்குமார் இணைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்த தகவல் முன்னரே வெளியான நிலையில் தற்போது அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. 


பிரகாஷ் ராஜ் - பிரபு

மேலும் இந்த படத்தில் நடிகர் பிரபு, பிரகாஷ் ராஜ், நடிகை ஜெயசுதா ஆகியோரும் இணைந்துள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இப்படம் வரும் பொங்கலுக்கு திரைக்கு வர இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
Tags:    

Similar News