சினிமா செய்திகள்
காஜல் அகர்வால்

நீ என் சூரியன், என் சந்திரன்.. காஜல் அகர்வால் நெகிழ்ச்சி பதிவு

Update: 2022-05-08 09:06 GMT
நடிகை காஜல் அகர்வால் சமூக வலைத்தளத்தில் குழந்தையின் புகைப்படத்தை பகிர்ந்து நெகிழ்ச்சியாக பதிவிட்டுள்ளது அனைவரின் கவனத்தையும் ஈர்த்து பாராட்டுக்களை பெற்று வருகிறது.
நான் மகான் அல்ல படத்திற்கு பிறகு பெருவாரியான ரசிகர்களை கவர்ந்த காஜல் அகர்வால், அதன்பின் மாற்றான், துப்பாக்கி, மாரி போன்ற படங்களில் முன்னணி நடிகர்களுடன் நடித்து தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கினார். 

தொழில் அதிபர் கவுதம் கிச்சலுவை கடந்தாண்டு காதல் திருமணம் செய்து கொண்ட நடிகை காஜல் அகர்வால், திருமணத்துக்கு பிறகும் படங்களில் பிசியாக நடித்து வருகிறார். தற்போது இவர் கைவசம் பல படங்கள் உள்ளன. காஜல் அகர்வாலுக்கு சமீபத்தில் ஆண் குழந்தை பிறந்தது. 


காஜல் அகர்வால் பதிவு

இந்நிலையில், அன்னையர் தினத்தையொட்டி நடிகை காஜல் அகர்வால் தனது மகனுடன் இருக்கும் புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் பகிர்ந்து அதில் சில விஷயங்களை குறிப்பிட்டு பதிவிட்டுள்ளார். அதில், "வரும் காலங்களில் நிறைய விஷயங்களில் ஒரு தாயாக உனக்கு நான் கற்றுத்தரவுள்ளேன். ஆனால் நீ எனக்கு ஏற்கனவே நிறைய விஷயங்களை கற்றுக்கொடுத்து விட்டாய். குறிப்பாக தாயாக இருப்பது என்ன என்பதை நீ எனக்கு கற்றுத்தந்துள்ளாய். என் இதயத்தின் ஒரு பகுதி என் உடலுக்கு வெளியே இருக்கிறது என்பதை உணரச்செய்துள்ளாய். என் சிறிய இளவரசனே, நீ என் சூரியன், என் சந்திரன், என் நட்சத்திரங்கள் அனைத்தும் நீங்கள்தான். அதை என்றும் மறந்து விடாதீர்கள் என்று நீண்ட பதிவிட்டுள்ளார். இவரின் இந்த பதிவிற்கு சமூக வலைத்தளத்தில் அனைவரும் பாராட்டி வருகின்றனர்.
Tags:    

Similar News