சினிமா செய்திகள்
சூர்யா

காளையுடன் சூர்யா.. வைரலாகும் வீடியோ

Update: 2022-04-15 05:33 GMT
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக இருக்கும் சூர்யா, அவர் வளர்க்கும் காளையுடன் நடந்து செல்லும் வீடியோ வைரலாகி வருகிறது.
நடிகர் சூர்யா தற்போது இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் ஜல்லிக்கட்டை மையமாக வைத்து உருவாகும் 'வாடிவாசல்' படத்தில் நடித்து வருகிறார். சமீபத்தில், இப்படத்தின் முன்னோட்ட காட்சிகளை படக்குழுவினர் எடுத்தனர். அப்படம் சம்மந்தப்பட்ட புகைப்படங்கள் வெளியாகி ரசிகர்கள் கொண்டாடி வந்தனர். அப்படத்திற்காக அவர் காளை ஒன்றை வளர்த்து வருகிறார். 


காளையுடன் சூர்யா

இந்நிலையில், சூர்யா தான் வளர்க்கும் காளையுடன் 'என் தமிழ்..' இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் என்று கூறி அனைவருக்கும் தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்களைக் கூறி ஒரு விடியோவைப் பகிர்ந்துள்ளார். தற்போது அந்த விடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.Tags:    

Similar News