சினிமா செய்திகள்
விஷால்

மாமா ஆனார் விஷால்.. மகிழ்ச்சியில் ரசிகர்கள்

Update: 2022-04-13 11:31 GMT
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வரும் விஷால் மாமா ஆகியுள்ள மகிழ்ச்சியான செய்தியை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.
வீரமே வாகை சூடும் படத்தின் வெற்றியை தொடர்ந்து விஷால் தற்போது நடித்து வரும் படம் லத்தி. அறிமுக இயக்குனர் வினோத் குமார் இயக்கும் இப்படத்தை ரமணா மற்றும் நந்தா இணைந்து தயாரிக்கின்றனர். யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. 


குடும்பத்துடன் விஷால்

இந்நிலையில் நடிகர் விஷால் அவருடைய சமூக வலைத்தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளது அவரின் ரசிகர்கள் கவனத்தை ஈர்த்துள்ளது. கடந்த ஆகஸ்ட் 27ம் தேதி 2019 அன்று விஷாலின் தங்கை ஐஸ்வர்யா கிருஷ்ணா - கிருடிஷ் திருமணம் நடைப்பெற்றது. இவர்களுக்கு தற்போது பெண் குழந்தை பிறந்துள்ள தகவலை விஷால் அவரின் பதிவின் மூலம் தெரிவித்துள்ளார். அந்த பதிவில் அவர் குறிப்பிட்டிருப்பது, இதை விட என்ன கேட்டுவிட முடியும், நான் மாமா ஆகியிருக்கிறேன் என்பதில் பெரும் மகிழ்ச்சி. என்னுடைய இளவரசி தங்கை ஐசுவிற்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. புதிய இளவரசியை கடவுள் ஆசிர்வதிக்கட்டும். இன்ஷா அல்லாஹ் என்று குறிப்பிட்டுள்ளார்.


Tags:    

Similar News