சினிமா செய்திகள்
அமீர்கான்

ஒவ்வொரு இந்தியரும் இந்த படத்தை பார்க்க வேண்டும்.. அமீர்கான் கருத்து

Published On 2022-03-21 07:51 GMT   |   Update On 2022-03-21 07:51 GMT
சமீபத்தில் வெளியாகி வரவேற்பும் எதிர்ப்பும் பெற்று வரும் படம் குறித்து அமீர்கான் கருத்து தெரிவித்துள்ளார்.
‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ என்ற இந்தி படம் திரைக்கு வந்து ஓடிக்கொண்டு இருக்கிறது. 1990-களில் காஷ்மீரில் இந்து பண்டிட்கள் மீது நடந்த தாக்குதல் மற்றும் பண்டிட்கள் உயிருக்கு பயந்து அங்கிருந்து தப்பிய சம்பவங்களை வைத்து இந்த படம் தயாராகி உள்ளது.

இதில், அனுபம் கெர், மிதுன் சக்கரவர்த்தி, பல்லவி ஜோஷ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். விவேக் அக்னிகோத்ரி இயக்கி உள்ளார். இந்த படத்துக்கு வரி விலக்கு அளிப்பதாக மத்திய பிரதேச மாநில அரசு அறிவித்திருந்தது. பிரதமர் நரேந்திர மோடியும், தி காஷ்மீர் பைல்ஸ் படக்குழுவினரை நேரில் அழைத்து பாராட்டினார். அதேச்சமயம் இப்படத்தில் இஸ்லாமியர்கள் காஷ்மீர் பண்டிட்டுகளைக் கொலை செய்வது போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளதாகக் கூறி எதிர்ப்புகள் எழுந்து வருகின்றன. 


தி காஷ்மீர் ஃபைல்ஸ்

இந்நிலையில் நடிகர் அமீர்கான் ‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ குறித்து அவரின் கருத்துக்களை தெரிவித்துள்ளார். அவர் கூறியிருப்பது, "‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ திரைப்படத்தை நான் நிச்சயமாகப் பார்ப்பேன். இது மாதிரியான தலைப்புகளில் வெளிவருகின்ற படத்தை ஒவ்வொரு இந்தியரும் கட்டாயம் பார்க்க வேண்டும். இதன் கதை நமது வரலாற்றைப் பேசியுள்ளது. காஷ்மீர் பண்டிட்களுக்கு நடந்தது மிகவும் வருந்தத்தக்கது. இந்தப் படம் மனிதத்தின் மீது நம்பிக்கை கொண்டுள்ள ஒவ்வொருவர் மனதையும் மிகவும் ஆழமாக தொட்டுள்ளது. அதனால் நான் நிச்சயம் பார்ப்பேன்” என்று கூறியுள்ளார்.

Tags:    

Similar News