சினிமா செய்திகள்
விஜய் சேதுபதி

விஜய் சேதுபதி படத்தின் படப்பிடிப்பு நிறைவு

Update: 2022-02-16 07:10 GMT
விஜய் சேதுபதி நடிப்பில் பொன்ராம் இயக்கத்தில் உருவாகி வரும் படத்தின் புதிய தகவல் வெளியாகியுள்ளது.
சிவகார்த்திகேயன் நடித்த ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’, ‘ரஜினி முருகன்’, ‘சீமராஜா’ உள்ளிட்ட படங்களை இயக்கியவர் பொன்ராம். இவர் அடுத்ததாக விஜய் சேதுபதியை வைத்து ”விஜேஎஸ்46” என்று தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ள படத்தை இயக்கி வருகிறார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு டி.இமான் இசையமைக்கிறார். பக்கா கமர்ஷியல் திரைப்படமாக உருவாகும் இதில் நடிகர் விஜய் சேதுபதி போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார். இப்படத்தில் அவருக்கு ஜோடியாக மிஸ் இந்தியா அழகி பட்டம் வென்ற அனுகீர்த்தி வாஸ் நடிக்கிறார்.


அனுகீர்த்தி வாஸ் - விஜய் சேதுபதி

திண்டுக்கல், செல்ங்கல்பட்டு போன்ற பல்வேறு இடங்களில் விறுவிறுப்பாக நடந்து வந்த படப்பிடிப்பு தற்போது நிறைவடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 
Tags:    

Similar News