விக்ரம் மற்றும் துருவ் விக்ரம் இணைந்து நடித்திருக்கும் ‘மகான்’ படத்தின் எவன்டா எனக்கு கஸ்ட்டடி பாடல் இன்று வெளியாகிறது என்று படக்குழு அறிவித்துள்ளது.
எவன்டா எனக்கு கஸ்ட்டடி... மிரட்டவரும் மகான்
பதிவு: ஜனவரி 28, 2022 14:45 IST
விக்ரம்
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் உருவாகி வெளிவரவிருக்கும் படம் 'மகான்'. விக்ரமும் அவருடைய மகனும் இணைந்து நடித்திருப்பதால் படம் பற்றிய எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகம் எழுந்துள்ளது. இப்படத்தில் சிம்ரன், வாணி போஜன், பாபி சிம்ஹா உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் சார்பில் லலித் தயாரிக்கும் இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்புகள் நிறைவடைந்து பின்னணி வேலைகள் முழுவீச்சில் நடைபெற்று முடிந்துள்ளது. மகான் திரைப்படம் 10-ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.
இந்நிலையில் அந்த படத்தின் எவன்டா எனக்கு கஸ்ட்டடி என்ற பாடல் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. கார்த்திக் சுப்புராஜ்-சந்தோஷ் நாராயணனின் கூட்டணியில் படம் உருவாகி இருப்பதால் ரசிகர்கள் மத்தியில் இன்னும் எதிர்ப்பார்ப்பு அதிகரித்து இருக்கிறது. இந்த பாடல் தனுஷ் நடித்து இவர்கள் கூட்டணியில் வெளியான ரகிட ரகிட பாடல் போன்று இருக்க வாய்ப்பிருக்கிறது என்று அவருடைய ரசிகர்கள் வலைத்தளங்களின் பதிவிட்டு கொண்டாடி வருகின்றனர்.