சினிமா
சிம்பு

மீண்டும் சிம்புவுடன் இணையும் பிரபல இசையமைப்பாளர்.... ஹாட்ரிக் ஹிட் கொடுப்பாரா?

Published On 2020-10-09 08:38 GMT   |   Update On 2020-10-09 12:00 GMT
சுசீந்திரன் இயக்கத்தில் சிம்பு நடிக்கும் புதிய படத்திற்கு பிரபல இசையமைப்பாளர் இசையமைக்க உள்ளதாக கூறப்படுகிறது.
வெண்ணிலா கபடி குழு, நான் மகான் அல்ல, பாண்டிய நாடு, ஜீவா, பாயும் புலி உள்ளிட்ட படங்களை இயக்கி பிரபலமான சுசீந்திரன் அடுத்ததாக சிம்பு நடிக்கும் படத்தை இயக்க உள்ளார். பெயரிடப்படாத இப்படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக நிதி அகர்வால் நடிக்கிறார். இவர் ஏற்கனவே ஜெயம் ரவிக்கு ஜோடியாக பூமி படத்தில் நடித்துள்ளார்.

இந்நிலையில், இந்தப் படத்தில் இசையமைப்பாளராக தமன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இவர், ஏற்கனவே, சிம்புவின் ஒஸ்தி, வாலு போன்ற படங்களுக்கு இசை அமைத்துள்ளார். அந்த இரண்டு படங்களிலும் பாடல்கள் சூப்பர் ஹிட் ஆகிய நிலையில், தற்போது மூன்றாவது முறையாக சிம்புவுடன் இணைந்துள்ள தமன் ஹாட்ரிக் ஹிட் கொடுப்பாரா என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.



இப்படத்தின் படப்பிடிப்பு திண்டுக்கல்லில் நடைபெறுகிறது. 40 நாட்களில் முழு படப்பிடிப்பையும் நடத்தி முடித்து உடனடியாக திரைக்கு கொண்டு வர திட்டமிட்டு உள்ளனர். இந்த படத்துக்காக சிம்பு கடும் உடற்பயிற்சி செய்து எடையை குறைத்து இருக்கிறார்.
Tags:    

Similar News