சினிமா

படம் ரிலீஸானது - சிம்பு கோரிக்கையை ஏற்காத ரசிகர்கள் பேனர் வைத்து பால் ஊற்றினார்கள்

Published On 2019-02-01 08:38 GMT   |   Update On 2019-02-01 08:38 GMT
சுந்தர்.சி. இயக்கத்தில் சிம்பு நடிப்பில் ‘வந்தா ராஜாவாதான் வருவேன்’ படம் இன்று ரிலீசாகியிருக்கும் நிலையில், ரசிகர்கள் சிம்புவுக்கு பேனர் வைத்து பால் ஊற்றினார்கள். #STR #VanthaRajavathaanVaruven
சுந்தர்.சி இயக்கத்தில் சிம்பு, மேகா ஆகாஷ், மகத், கேத்தரீன் தெரசா, ரோபோ சங்கர், யோகி பாபு நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘வந்தா ராஜாவாதான் வருவேன்’. தெலுங்கில் வெளியாகி வெற்றி பெற்ற ‘அத்தாரண்டிகி தரேதி’ படத்தின் ரீமேக்.

இந்தப் படம் முதலில் ‘பொங்கல் வெளியீடு’ என அறிவிக்கப்பட்டது. ஆனால் அஜித்தின் ‘விஸ்வாசம்’ ரஜினியின் ‘பேட்ட’ படங்கள் ரிலீசானதால் திரையரங்குகள் கிடைக்கவில்லை.

பிப்ரவரி 1-ந் தேதி படம் ரிலீசாகும் என அதிகாரபூர்வமாக அறிவிப்பு வந்ததால் சிம்பு ரசிகர்கள் உற்சாகத்தில் இருந்தனர்.

இந்த படத்தின் வெளியீட்டின் போது கட்அவுட், பேனர் எல்லாம் வைக்காதீர்கள். அந்தப் பணத்தில் உங்களுடைய குடும்பத்தினருக்கு உடைகள், இனிப்புகள் வாங்கிக் கொடுங்கள். அதை வீடியோவாக எடுத்து வெளியிடுங்கள் என்று சிம்பு தனது ரசிகர்களுக்காக வெளியிட்ட வீடியோவில் வேண்டுகோள் விடுத்திருந்தார்.

இந்த வீடியோ பதிவைக் குறிப்பிட்டு சமூகவலைதளங்களில் பலரும் கிண்டல் செய்ய தொடங்கினார்கள். ‘இருப்பதே சில ரசிகர்கள் தான்’, ‘இதற்கே இப்படியா’ என்று குறிப்பிட்டனர். இதற்கு பதிலடியாக சிம்பு புதிதாக வீடியோ ஒன்றை வெளியிட்டார்.



அதில் ‘எனது திரைப்படம் வெளியாகும்போது இதுவரை இல்லாத அளவுக்கு பேனர் வையுங்கள். கட் அவுட்களுக்கு அண்டா, அண்டாவாக பால் ஊற்றுங்கள்” என கூறி இருந்தார். இது சர்ச்சை ஆனது. பால் முகவர் சங்கம் அவருக்கு கண்டனம் தெரிவித்து காவல் ஆணையர் அலுவலகத்தில் புகாரும் அளித்தது.

சிம்புவின் இந்த வீடியோவுக்கும் கடும் எதிர்ப்புகள் வரவே ரசிகர் வீட்டுக்கு வருகை தந்தபோது ‘நான் அந்த அர்த்தத்தில் கூறவில்லை’ என்று சிம்பு விளக்கம் அளித்தார். பாலை காய்ச்ச்சி படம் பார்க்க வருபவர்களுக்கு கொடுக்க தான் சொன்னேன் என்று கூறினார்.

இதற்கிடையே சிம்புவின் படம் இன்று ரிலீசானது. சென்னையில் சில தியேட்டர்களில் அதிகாலை 5 மணிக்கு காட்சிகள் திரையிடப்பட்டது. கோயம்பேட்டில் உள்ள ரோகிணி தியேட்டருக்கு வந்த சிம்பு ரசிகர்களுடன் படம் பார்த்து மகிழ்ந்தார். அவருடன் மகத், ரோபோ சங்கர் உடன் இருந்தனர். ரசிகர்களும் அவருடன் படம் எடுத்துக்கொண்டனர்.

சிம்பு பேனர் வைக்க வேண்டாம், பால் ஊற்ற வேண்டாம் என்று சொல்லியும் ரசிகர்கள் கேட்கவில்லை. சிம்பு படம் திரையிடப்பட்ட தியேட்டர்களில் பெரிய பெரிய கட் அவுட்கள் வைக்கப்பட்டு இருந்தன. அவைகளுக்கு பால் ஊற்றினார்கள்.

இதுபற்றி சிம்புவின் மக்கள் தொடர்பாளர் ஹரிஹரனிடம் கேட்டதற்கு ‘அண்ணனின் கோரிக்கையை ஏற்று ரசிகர்கள் அதிக அளவில் பேனர் அமைப்பதை தவிர்த்துவிட்டனர். வழக்கமாக பட ரிலீசின் போது வைக்கப்படும் பேனர்களில் பாதிகூட வைக்கப்படவில்லை. ஒரு சில ரசிகர்கள் அன்புமிகுதியால் அண்ணனின் பேச்சை கேட்காமல் வைத்துவிட்டனர். படம் நன்றாக இருக்கிறது. கமர்சியலாக பெரிய வெற்றி பெறும்’ என்றார். 

வந்தா ராஜாவாதான் வருவேன் சிறப்பு காட்சியை சிம்பு ரசிகர்களுடன் சேர்ந்து பார்த்தார் என்பது குறிப்பிடத்தக்கது. #STR #VanthaRajavathaanVaruven

Tags:    

Similar News