சினிமா

இந்திய அளவில் சாதனை படைத்த விஸ்வாசம் மோஷன் போஸ்டர்

Published On 2018-11-26 07:39 GMT   |   Update On 2018-11-26 07:55 GMT
சிவா இயக்கத்தில் அஜித்குமார் - நயன்தாரா நடிப்பில் உருவாகி வரும் விஸ்வாசம் படத்தின் மோஷன் போஸ்டர் இந்திய அளவில் புதிய சோதனை படைத்துள்ளது. #ViswasamMotionPoster #ViswasamPongal2019 #AjithKumar
சிவா இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகி வரும் ‘விஸ்வாசம்’ படத்தின் படப்பிடிப்பு முடிந்து இறுதிக்கட்ட பணிகள் மும்முரமாக நடந்து வரும் நிலையில், ரசிகர்களுக்கு திடீர் இன்பஅதிர்ச்சியாக படத்தின் மோஷன் போஸ்டரை படக்குழு நேற்று வெளியிட்டது. அதில் இளமை மற்றும் வயதான தோற்றத்தில் அஜித் வலம் வருகிறார். மோஷன் போஸ்டரில் படம் பொங்கலுக்கு ரிலீசாகும் என்பதையும் படக்குழு உறுதிப்படுத்தியுள்ளது.

நேற்று இரவு 9 மணிக்கு வெளியான விஸ்வாசம் மோஷன் போஸ்டரை இதுவரை இரண்டரை லட்சத்திற்கும் அதிகமானோர் கண்டுகளித்துள்ளனர். 3 லட்சத்திற்கும் அதிகமானோர் லைக் செய்துள்ளனர். இதன்மூலம் இந்திய சினிமாவில் அதிக லைக்குகளை பெற்ற மோஷன் போஸ்டர் வரிசையில் விஸ்வாசம் முதல் இடத்தை பிடித்துள்ளது. அதைத் தொடர்ந்து ரஜினியின் பேட்ட (144K), தக்ஸ் ஆஃப் இந்தோஸ்தான் (124K), சாமி ஸ்கொயர் (101K), சயீரா நரசிம்மமரெட்டி (82K) உள்ளிட்ட படங்கள் அடுத்தடுத்த இடங்களில் இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.



மதுரை பின்னணியில் உருவாகி இருக்கும் இந்த படத்தில் அஜித் ஜோடியாக நயன்தாரா நடித்திருக்கிறார். விவேக், தம்பி ராமையா, ரோபோ சங்கர், யோகி பாபு, போஸ் வெங்கட், ரமேஷ் திலக் உள்ளிட்ட பலரும் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். 

அஜித் இந்தப் படத்தில் ‘தூக்கு’ துரை என்ற கேரக்டரில் நடித்திருக்கிறார். சத்யஜோதி பிலிம்ஸ் தயாரித்துள்ள இந்த படத்திற்கு டி.இமான் இசையமைத்துள்ளார். #Viswasam #AjithKumar #Nayanthara #ViswasamMotionPoster #ViswasamPongal2019 #ViswasamThiruvizha

விஸ்வாசம் மோஷன் போஸ்டர்:

Tags:    

Similar News