சினிமா

மீடூ விவகாரத்தில் ஆதாரம் கேட்க கூடாது - ராதிகா ஆப்தே

Published On 2018-11-14 10:29 GMT   |   Update On 2018-11-14 10:29 GMT
மீடூ வி‌ஷயத்தில் புகார் கூறும் பெண்களிடம் ஆதாரம் கேட்க கூடாது என்று நடிகை ராதிகா ஆப்தே கூறியுள்ளார். #RadhikaApte #MeToo
கபாலி படத்தில் ரஜினிக்கு மனைவியாக நடித்த ராதிகா ஆப்தே இந்தி பட உலகில் முன்னணி நடிகை. மீடூ இயக்கம் பிரபலமாகும் முன்பே வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைப்பது பற்றி பேசியவர். மீடூ இயக்கம் பற்றி அளித்துள்ள பேட்டி ஒன்றில் ‘நான் மீடூ இயக்கத்தை 100 சதவீதம் ஆதரிக்கிறேன்.

பாலியல் துன்புறுத்தலை எந்த விதத்திலும் சகிக்க முடியாது. இது இப்போது அத்தியாவசியமான ஒரு இயக்கமாகி விட்டது. பாதிக்கப்பட்டவர்கள் வெளியில் வந்து தங்களுக்கு நேர்ந்த கொடுமையை பகிரங்கப்படுத்துவதும் அவர்களுக்கு ஆதரவாக சமூகத்தில் குரல்கள் எழுவதும் ஆரோக்கியமான ஒரு வி‌ஷயம்.



ஆனால் மீடூ வி‌ஷயத்தில் புகார் கூறும் பெண்களிடம் ஆதாரம் கேட்பதையும் ஏற்றுக்கொள்ள முடியாது. இதுபோன்ற வி‌ஷயங்களில் எப்போதும் ஆதாரத்தை சேகரித்து கையில் வைத்துக்கொண்டு குற்றம் சாட்ட முடியாது. நாம் நம் எதிர்ப்பை காட்டாவிட்டால் அதையே அவர்களுக்கான வசதியாக எடுத்துக்கொண்டு தொடர்ந்து தவறு செய்வார்கள். ஒருமுறை என்னுடைய பின்புறத்தை ஒருவன் தட்டிவிட்டு சென்றான். 20 நிமிடங்களில் நான் அதை மறந்துவிட்டேன். ஆனால் சுற்றிலும் இருந்தவர்கள் அதை நினைவுபடுத்திக்கொண்டே இருந்தார்கள்’ என்று கூறியுள்ளார்.
Tags:    

Similar News