சினிமா

பெண்களை தவறாக பயன்படுத்தவில்லை - விஷால்

Published On 2018-11-11 07:41 GMT   |   Update On 2018-11-11 07:41 GMT
மீடூ இயக்கத்தின் மூலம், பலரும் பாலியல் குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வரும் நிலையில், பெண்களை தவறாக பயன்படுத்த வில்லை என்று விஷால் கூறியிருக்கிறார். #Vishal
திரைத்துறையில் பெண்கள் பாலியல் ரீதியாக வேட்டையாடப்படுவதாக சமீப காலங்களில் புகார்கள் அதிகரித்துள்ளன. மீடூ இயக்கத்தின் மூலம், பலரும் பாலியல் குற்றச்சாட்டுக்களை முன்வைக்கின்றனர்.

இது குறித்து பேசியுள்ள நடிகர் சங்க பொதுசெயலாளர் விஷால், சினிமாவில் வாய்ப்புக்காக பெண்களை பணிய வைப்பது தடுக்கப்பட வேண்டும். இதை தமிழ் மட்டுமல்லாமல் மற்ற மொழி திரைத்துறையும் உறுதிசெய்ய வேண்டும். குற்றவாளிகளை அடையாளம் காட்டுவதற்காக தொடங்கப்பட்ட மீடூ இயக்கம் சிலரின் தனிப்பட்ட காரணங்களுக்காகவும் பயன்படுத்தப்படுகிறது. 



காலம் தாழ்த்துதல், வாய்ப்பு தருவதாக உறுதியளித்துவிட்டு அது நடக்காமல் போனால் பழிவாங்குவதற்காக மீடூவை ஆயுதமாக எடுக்கும் நிலையும் உள்ளது. அது நிறுத்தப்பட வேண்டும். மனம் ஒத்து பழகுவதற்கும் ஒருவரை தவறாக உபயோகிப்பதற்கும் வித்தியாசம் இருக்கிறது. நானும் சில பெண்களுடன் டேட்டிங் சென்றிருக்கிறேன், அதனால் அவர்களை தவறாக பயன்படுத்தினேன் என்று அர்த்தமில்லை’ என்றார்.
Tags:    

Similar News