சினிமா

2 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் மோதும் விஜய்சேதுபதி - சிவகார்த்திகேயன்

Published On 2018-08-22 15:46 GMT   |   Update On 2018-08-22 15:46 GMT
2 வருடங்களுக்குப் பிறகு விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயனும் தங்களுடைய படங்களை ஒரே நாளில் ரிலீஸ் செய்து மோத இருக்கிறார்கள். #VijaySethupathi #Sivakarthikeyan
விஜய் சேதுபதி நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் ‘96’. இதில் திரிஷா விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடித்திருக்கிறார். `நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்' படத்தில் ஒளிப்பதிவாளராக பணியாற்றிய சி.பிரேம்குமார் இயக்குநராக அறிமுகமாகிறார். 

இதன் படப்பிடிப்பு முடிந்து பின்னணி வேலைகள் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், படத்தின் இசை மற்றும் டிரைலர் வருகிற ஆகஸ்ட் 24-ஆம் தேதி வெளியாக இருப்பதாக படக்குழு அறிவித்தது. இப்படம் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு செப்டம்பர் 13ம் தேதி வெளியாக இருக்கிறது.

அன்றைய தினத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘சீமராஜா’ திரைப்படமும் வெளியாக இருக்கிறது. பொன்ராம் இயக்கியுள்ள இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக சமந்தா நடித்துள்ளார். 



இதற்கு முன் சிவகார்த்திகேயனும், விஜய் சேதுபதியும் 2016ம் ஆண்டு ரெமோ, றெக்க படங்கள் ஒரே நாளில் வெளியானது. தற்போது 2 வருடங்களுக்கு சீமராஜா, 96 படம் மூலம் இருவரும் மோதுகிறார்கள். #96TheMovie #SeemaRaja
Tags:    

Similar News