சினிமா

சினிமாவுக்கு வந்தபோது எதுவுமே தெரியாது - கார்த்தி

Published On 2018-08-19 09:27 GMT   |   Update On 2018-08-19 09:27 GMT
தமிழில் முன்னணி நடிகராக வலம் வரும் கார்த்தி, சினிமாவுக்கு வந்த போது எதுவுமே தெரியாது என்று பட விழாவில் கூறியிருக்கிறார். #Karthi
ஆசிப் குரேஷி இயக்கத்தில் உதயா, பிரபு, நாசர், கோவை சரளா நடித்துள்ள உத்தரவு மகாராஜா படத்தின் இசை வெளியீட்டு நிகழ்ச்சி கலைவாணர் அரங்கில் நடைபெற்றது. இதில் நடிகர்கள் கார்த்தி, பொன்வண்ணன், அருண்விஜய், விவேக், மனோபாலா, பசுபதி, ரோகிணி, லிசி, சங்கீதா, இயக்குனர்கள் ஆர்கே செல்வமணி, ஆர்வி.உதயகுமார் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில் கார்த்தி பேசும்போது ’உதயா எப்போதுமே ஒரு படத்தை பார்த்தால் அந்த படத்தை டீட்டெய்ல்டாக விமர்சனம் செய்வார். முதல்முறையாக உதயாவின் அப்பா உதயாவை பாராட்டி இருக்கிறார். அப்பா பாராட்டினால் கண்டிப்பாக நாம் வெற்றி பெறுவோம் என்று அர்த்தம்.

இந்த படம் பெரிய ரிஸ்க் என்பது டிரெய்லரை பார்க்கும்போதே தெரிகிறது. இங்கு பேசியவர்கள் என் தந்தை எங்களை சினிமாவுக்குள் எளிதாக கொண்டுவந்து விட்டதாக பேசினார்கள். அப்படி இல்லை. எல்லாவற்றிற்குமே காத்திருப்பு இருக்கிறது.

சிறுத்தைக்கு பின் நிறைய படங்கள் நடித்துவிட்டேன். கடைக்குட்டி சிங்கம் படத்தை பார்த்தவர்கள் சிறுத்தைக்கு பிறகு இது நன்றாக இருக்கிறது என்கிறார்கள். நான் சினிமாவுக்குள் வந்தபோது டான்ஸ், சண்டை எதுவும் தெரியாது. உள்ளே வந்துதான் கற்றுக்கொள்ள தொடங்கினேன்’ என்றார்.
Tags:    

Similar News