சினிமா

தயாரிப்பாளராகி தடுமாறும் கதாநாயகர்கள்

Published On 2018-08-06 11:41 GMT   |   Update On 2018-08-06 11:41 GMT
தமிழில் கதாநாயகர்களாக நடித்து பெயர் பெற்றவர்கள் சிலர், தற்போது தயாரிப்பாளர்களாக மாறி தடுமாறி வருகிறார்கள். #Dhanush #Arya #Vishal #Atharvaa
தமிழ் சினிமாவில் இளம் கதாநாயகர்களுக்கு ஒருசில படங்கள் வெற்றி பெற்றாலே சொந்த படம் தயாரிக்கும் ஆசை வந்துவிடுகிறது. ஆனால் அப்படி சொந்த படத்தில் காலடி வைப்பவர்கள் சரியான கதையை தேர்ந்தெடுக்காமல் தயாரிப்பதால் படங்கள் தோல்வி அடைந்து நஷ்டத்துக்குள்ளாகிறார்கள். சமீபத்தில் அதர்வா நடித்து தயாரித்த செம போத ஆகாதே படம் தோல்வி அடைந்தது. இனி தயாரிப்பில் ஈடுபடவே மாட்டேன் என்று அதர்வா கூறிவிட்டார்.

ஆர்யா தயாரித்த வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க, கடம்பன் ஆகிய படங்கள் சரியாக போகாததால் அவர் தயாரிப்பை சிலகாலம் ஒதுக்கி வைத்து இருக்கிறார். விஜய்சேதுபதி தயாரித்து சமீபத்தில் வெளியான ஜுங்கா படத்தாலும் இழப்பு ஏற்படும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

விஷால் தயாரித்து நடித்த சில படங்கள் தோல்வி அடைந்தன. இரும்புத்திரை படம் தான் காப்பாற்றியது. தனுஷ் தயாரித்த அம்மா கணக்கு, படம் பெரிதாக போகவில்லை. விஜய் ஆண்டனிக்கும் சில படங்கள் அடி. எனவே கதாநாயகர்கள் தயாரிப்பில் இறங்குவதற்கு யோசிக்கிறார்கள்.



மூத்த தயாரிப்பாளர் ஒருவர், நடிப்பதற்கு கதை கேட்பது என்பது வேறு. தயாரிப்புக்கு கதை கேட்பது என்பது வேறு. சரியான கதைகளை தேர்ந்தெடுத்தால் மட்டுமே ஜெயிக்க முடியும். நட்பு பார்த்து படங்கள் கொடுத்தால் இழப்பை தான் சந்திக்க நேரிடும்’ என்று எச்சரித்தார்.
Tags:    

Similar News