சினிமா

இது அந்த மாதிரியான படம் இல்லை - சர்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த கயல் சந்திரன்

Published On 2018-08-06 04:37 GMT   |   Update On 2018-08-06 04:37 GMT
மகா விஷ்ணு இயக்கத்தில் கயல் சந்திரன் - அஞ்சு குரியன் நடிப்பில் உருவாகும் `நான் செய்த குறும்பு' படத்தின் போஸ்டர் சர்ச்சைக்கு நடிகர் சந்திரன் விளக்கம் அளித்துள்ளார். #NaanSeidhaKurumbu #Chandran
மகா விஷ்ணு இயக்கத்தில் கயல் சந்திரன் - அஞ்சு குரியன் நடிப்பில் உருவாகும் படம் `நான் செய்த குறும்பு'. இந்த படத்தின் போஸ்டர்கள் சமீபத்தில் வெளியாகி விமர்சனத்துக்குள்ளாகியது. போஸ்டரில் கயல் சந்திரன் கர்ப்பிணி பெண் போன்ற தோற்றத்தில் மகப்பேறு பெறுவது போல் அந்த போஸ்டர் இருந்தது. இதனால் அந்த போஸ்டருக்கு சமூக வலைதளங்களில் கண்டனங்கள் எழுந்தது.

இந்த நிலையில், படத்தின் பூஜை மற்றும் தொடக்க விழா நேற்று நடந்தது. விழாவில் முக்கிய அம்சமாக கர்ப்பிணிப் பெண்கள் ஐந்து பேருக்கு வளைகாப்பு நடத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் நாயகன் சந்திரன் பேசும்போது,

`இப்படத்தின் பர்ஸ்ட் லுக் பார்த்து ட்விட்டரில் பலவிதமான கருத்துகள் வந்தன. சிலர் ஒரு மாதிரியான படமாக இருக்குமோ என்று கூறியிருந்தார்கள். நான் சொல்கிறேன் இது சுரேஷ் கிருஷ்ணாவின் `ஆஹா' படம் மாதிரி குடும்பத்துடன் பார்க்கும் படமாக இருக்கும். நான் செய்த குறும்பு அடல்ட் காமெடி படம் கிடையாது. பெண்களை கிண்டல் செய்யும் விதத்தில் இந்த போஸ்டரை வெளியிடவில்லை. பெண்கள் படும் கஷ்டத்தை ஒரு ஆணும் பட வேண்டும். அப்போது தான் அவர்கள் அனுபவிக்கும் வேதனைகள் புரியும்' என்றார்.



ரைட்டர் இமேஜினேஷன்ஸ் தயாரிக்கும் இந்த படத்தின் தொடக்க விழாவில் நாயகி அஞ்சு குரியன், மிர்ச்சி விஜய், இசையமைப்பாளர் அச்சு ராஜாமணி, ஒளிப்பதிவாளர் ரமணன் புருஷோத்தமா, கலை இயக்குநர் ஏ.ஆர். மோகன், எடிட்டர் மணிக்குமரன் சங்கரா, நிர்வாகத் தயாரிப்பாளர் சுரேஷ் ராஜா, இணைத் தயாரிப்பாளர் எஸ்.பி. சுரேஷ், தயாரிப்பு நிர்வாகி ஹென்றி குமார், தயாரிப்பாளர்கள் டெல்லி பாபு,  பானு பிக்சர்ஸ் ராஜா, விநியோகஸ்தர் ஜேகே, உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். #NaanSeidhaKurumbu #Chandran

Tags:    

Similar News