சினிமா

நே‌ஷனல் ஜியாகிரபியில் கமல் பற்றிய நிகழ்ச்சி

Published On 2018-07-22 08:51 GMT   |   Update On 2018-07-22 08:51 GMT
முன்னணி நடிகராக இருக்கும் கமல் பற்றிய நிகழ்ச்சி ஒன்று நேஷனல் ஜியாகிரபியில் ஒளிபரப்ப இருக்கிறது. #Kamal #Kamalhaasan
இந்திய சினிமாவில் ஒரு முன்னணி ஆளுமையாக இருப்பவர் கமல்ஹாசன். தற்போது மக்கள் நீதி மய்யம் என்ற கட்சியை ஆரம்பித்து அரசியலிலும் ஈடுபட்டு வருகிறார். அதுபோல இந்திய கிரிக்கெட் அணியில் முன்னணி வீரராகவும் கேப்டனாகவும் இருந்துவருகிறார் விராட் கோலி. 

இப்படியான இரு வேறுபட்ட துறைகளில் முக்கிய ஆளுமையாக இருந்துவரும் இருவர் குறித்தும் நே‌ஷனல் ஜியாகிரபி சேனலில் ஆரம்பிக்கப்பட உள்ள ‘மெகா ஐகான்ஸ்’ எனும் புதிய தொடரில் விவரிக்கப்பட உள்ளது. 



வருகிற செப்டம்பர் மாதம் தொடங்கவுள்ள இந்தத் தொடர் வெறும் சாதனைகளை மட்டுமே விளக்கும் வழக்கமான ஒரு தொடராக இல்லாமல் பிரபலங்களின் பின்புலம், சூழல், அவர்களுக்கு நெருக்கமானவர்களிடமிருந்து பெறப்பட்ட தகவல்கள், புள்ளிவிவரங்கள், கள ஆய்வுகள், அறிவியல் ஆய்வுகள், நிபுணர்களுடைய ஆய்வு முடிவுகள் ஆகியவற்றைக் கொண்டு உருவாக்கப்பட இருக்கிறது.
Tags:    

Similar News