சினிமா
பியார் பிரேமா காதல் படத்தின் டிரைலர் ரிலீஸ் தேதி அறிவிப்பு
யுவன் சங்கர் ராஜா தயாரிப்பில் இளன் இயக்கத்தில் ஹரிஷ் கல்யாண், ரைசா நடிப்பில் உருவாகி இருக்கும் ‘பியார் பிரேமா காதல்’ படத்தின் டிரைலர் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. #PyaarPremaKaadhal
பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான ஹரிஷ் கல்யாண் - ரைசா வில்சன் இணைந்து நடித்து வரும் படம் `பியார் பிரேமா காதல்'.
இளன் என்ற புதுமுக இயக்குநர் இயக்கும் இந்த படத்தை ஒய்.எஸ்.ஆர். பிலிம்ஸ் சார்பில் யுவன் ஷங்கர் ராஜாவும், பாகுபலி படத்தை வெளியிட்ட 'கே புரொடக்ஷன்ஸ்’ நிறுவனம் சார்பில் ராஜராஜனும் இணைந்து தயாரிக்கின்றனர். காதல் கலந்த காமெடி படமாக உருவாக இருக்கும் இந்த படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார்.
இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து தற்போது ரிலீஸுக்கு தயாராகி வருகிறது. இந்நிலையில், இப்படத்தின் டிரைலரை ஜூலை 21ம் தேதி மாலை 6 மணிக்கு வெளியிட இருப்பதாக யுவன் சங்கர் ராஜா அறிவித்திருக்கிறார்.
Happy to announce #ppk#PyaarPremaKaadhal@iamharishkalyan@raizawilson@irfanmalik83@Rajarajan7215@U1Records@YSRfilms@KProductionsIndpic.twitter.com/eRkVOz4bqj
— Yuvanshankar raja (@thisisysr) July 19, 2018
ஏற்கனவே இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது குறிப்பிடத்தக்கது.