சினிமா

நோட்டீஸ் எதிரொலி - சர்கார் படத்தின் புகைப்பிடிக்கும் போஸ்டர் நீக்கம்

Published On 2018-07-06 10:52 GMT   |   Update On 2018-07-06 10:52 GMT
விஜய் புகைப்பிடிக்கும் ‘சர்கார்’ படத்தின் போஸ்டருக்கு சுகாதாரத்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ள நிலையில், அந்த போஸ்டரை தனது சமூக வலைத்தளத்தில் இருந்து நீக்கியுள்ளது. #Sarkar #Vijay
விஜய் நடிப்பில் தற்போது உருவாகி வரும் படம் ‘சர்கார்’. இந்த படத்தின் போஸ்டர்கள் கடந்த 21ம் தேதி விஜய் பிறந்தநாளை ஒட்டி வெளியானது. போஸ்டர்களில் விஜய் புகைபிடிப்பது போன்ற காட்சிகள் இடம்பெற்றன. ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்தாலும், அரசியல் மற்றும் சமூக ஆர்வலர்களிடம் எதிர்ப்புகள் கிளம்பின. 

பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞர் அணி தலைவர், அன்புமணி ராமதாஸ் கடும் கண்டனம் தெரிவித்தார். மேலும் சில சுகாதார அமைப்புகளும் தங்களது எதிர்ப்பை பதிவு செய்தன.

இந்நிலையில் புகைபிடித்தபடி விஜய் இருக்கும் படங்களை உடனே இணையதளங்கள், சமூக வலைதளங்கள் மற்றும் பொது வெளியில் இருந்து நீக்க வேண்டும் என்று பொது சுகாதாரத்துறை நடிகர் விஜய் மற்றும் இயக்குனர் முருகதாசுக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளது. உடனடியாக நீக்காவிட்டால் அவர்கள் மீது சட்டபூர்வமான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்துள்ளது. 



மேலும் புகை பிடிக்கும் பழக்கத்தை ஒழிக்க அரசு மேற்கொள்ளும் முயற்சிகளுக்கு திரைத்துறையினரும் ஒத்துழைப்பு தர வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளது. இந்நிலையில், இப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ், தனது சமூக வலைத்தள பக்கத்தில் இருந்து சர்கார் படத்தின் புகைப்பிடிக்கும் போஸ்டரை நீக்கியுள்ளது. #Sarkar #Vijay
Tags:    

Similar News