சினிமா

விஜய், சூர்யாவுடன் மோத விரும்பாத அஜித்

Published On 2018-06-29 11:14 GMT   |   Update On 2018-06-29 11:14 GMT
சிவா இயக்கத்தில் அஜித் நடித்து வரும் விஸ்வாசம் திரைப்படம், விஜய்யின் ‘சர்கார்’ மற்றும் சூர்யாவின் ‘என்.ஜி.கே’ திரைப்படத்துடன் மோத விரும்பாமல் ரிலீஸ் தேதியை மாற்றி இருக்கிறார். #Ajith #Viswasam
சிவா இயக்கத்தில் அஜித் 4-வது முறையாக நடித்து வரும் படம் ‘விசுவாசம்’. ஐதராபாத்தில் தொடங்கிய இதன் முதல் கட்டப்படப்பிடிப்பு தற்போது முடிந்துள்ளது. அடுத்தகட்ட படப்பிடிப்பு சென்னையில் தொடங்கியுள்ளது. இந்த படப்பிடிப்பில் அஜித் இளமை தோற்றத்தில் நடிக்க இருக்கிறார். 

இந்த படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். மேலும் விவேக், யோகிபாபு உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்து வரும் இப்படத்திற்கு இமான் இசையமைத்து வருகிறார்.

இப்படம் தீபாவளிக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது 40 சதவிகிதம் படப்பிடிப்பு மட்டுமே முடிந்துள்ளதால், இப்படத்தை பொங்கலுக்கு ரிலீஸ் செய்ய படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர்.



இதனால், தீபாவளி தினத்தில் விஜய்யின் ‘சர்கார்’ திரைப்படமும், சூர்யாவின் ‘என்.ஜி.கே’ திரைப்படமும் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. #Ajith #Viswasam
Tags:    

Similar News