சினிமா

ரஜினி, அஜித்துக்கு பிறகு அவர் படத்தைத்தான் முதல் நாள் பார்ப்பேன் - அனிருத்

Published On 2018-06-11 13:56 GMT   |   Update On 2018-06-11 13:56 GMT
ரஜினி, அஜித்துக்கு பிறகு அவர் படத்தைத்தான் முதல் நாள் பார்ப்பேன் என்று இசையமைப்பாளர் அனிருத், ஆர்.கே.நகர் டிரைலர் வெளியீட்டு விழாவில் பேசியுள்ளார். #RKNagar #Anirudh
‘சென்னை 600028’ படத்தின் இரண்டாம் பாகத்தை தன்னுடைய பிளாக் டிக்கெட் கம்பெனி நிறுவனம் சார்பில் தயாரித்த வெங்கட் பிரபு, இரண்டாவது படமாக வைபவை வைத்து ஆர்.கே.நகர் என்ற படத்தை தயாரித்துள்ளார். இப்படத்தை ‘வடகறி’ படத்தை இயக்கிய சரவண ராஜன் இயக்கியுள்ளார். 

வைபவுக்கு ஜோடியாக ‘சென்னை 600028’ இரண்டாம் பாகத்தில் நடித்த சானா அல்தாப் நடிக்கிறார். சம்பத் வில்லனாக நடிக்கிறார். பிரேம்ஜி இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து தற்போது ரிலீசுக்கு தயாராகி வருகிறது. இந்நிலையில் இப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா இன்று நடைபெற்றது.

இதில் அனிருத் சிறப்பு விருந்தினராக கலந்துக் கொண்டு டிரைலரை வெளியிட்டார். பின்னர் அவர் பேசும்போது, ‘நான் இந்த படத்திற்கு விருந்தினராக வரவில்லை. ஒரு விசிறியாக வந்திருக்கிறேன். இந்த படத்தின் நாயகன் வைபவ் நடித்த ‘மேயாதமான்’ படத்தை இதுவரைக்கும் 10 தடவைக்கும் மேல் பார்த்திருப்பேன். அந்த படத்தில் வைபவ்வின் காமெடி, டைமிங் ஆகியவற்றை நானும் என் நண்பர்களும் ரசித்திருக்கிறோம். 

ஆர்.கே.நகர் படத்தின் இயக்குனர் சரவண ராஜன் இயக்கத்தில் முந்தைய படமான ‘வடகறி’ படத்தில் நான் ஒரு பாட்டு பாடியிருக்கிறேன். நண்பர் விவேக்தான் இசையமைத்திருந்தார். இசை சுனாமி பிரேம்ஜிக்கும் எனக்கும் நல்ல நட்பு இருக்கிறது. இசை சுனாமி டைட்டில் பிரேம்ஜிக்கு பொருத்தமாக இருக்கிறது. இதை அவர் வைத்துக் கொள்ள நான் வேண்டிக்கிறேன். 



சிவாவிற்கும் நான் மிகப்பெரிய விசிறி. நான் தியேட்டரில் படம் பார்ப்பது குறைவு. ரஜினி, அஜித் படங்களை முதல் நாளில் போய் பார்ப்பேன். அதுக்குப் பிறகு சிவாவுடைய படத்தைதான் முதல் நாள் போய் பார்ப்பேன். மேடைக்காக சொல்லவில்லை. உண்மையாக சொல்லுகிறேன். அவருடைய காமெடி எனக்கு ரொம்ப பிடிக்கும்.

படத்தின் தயாரிப்பாளர் வெங்கட் பிரவுக்கும் நான் விசிறிதான். சினிமாவில் நண்பர்கள் கிடைப்பது அரிது. ஆனால், வெங்கட் பிரபு பெரிய நண்பர்கள் பட்டாளமே வைத்துள்ளார். அதை தொடர்ந்து மெயிண்டெயின் பண்ணிட்டு வருகிறார். என்னுடைய நண்பர்கள் குழுவும் இதை கடைப்பிடிக்க வலியுறுத்தி வருகிறேன். 

இவர்கள் கூட்டணியில் உருவாகி இருக்கும் ‘ஆர்.கே.நகர்’ படம் வெற்றி பெற வாழ்த்துகிறேன்’ என்றார்.
Tags:    

Similar News