சினிமா

25வது ஆண்டை கொண்டாடும் மகேந்திரன்

Published On 2018-05-09 03:48 GMT   |   Update On 2018-05-09 03:48 GMT
கே.எஸ்.ரவிகுமார் இயக்கத்தில் வெளியான நாட்டாமை படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான மகேந்திரன், தற்போது 25வது ஆண்டை கொண்டாடி வருகிறார். #25YrsOfMahendran
‘நாட்டாமை’ படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் மகேந்திரன். முதல் படத்திலேயே தன்னுடைய நடிப்பால் பலருடைய கவனத்தை ஈர்த்தார் மகேந்திரன். இப்படத்தை தொடர்ந்து பாண்டியராஜனுடன் ‘தாய்க்குலமே தாய்க்குலமே’ என்ற படத்தில் நடித்தார். இந்தப் படத்தில் சிறந்த குழந்தை நட்சத்திரத்திற்கான மாநில விருதை பெற்றார்.

இதைத் தொடர்ந்து ‘பரம்பரை’, ‘கும்பகோணம் கோபாலு’, விஜய் நடிப்பில் வெளியான ‘மின்சார கண்ணா’, ரஜினியுடன் ‘படையப்பா’, அஜித்துடன் ‘முகவரி’, பிரபுதேவாவுடன் ‘நெஞ்சிருக்கும் வரை’ உள்ளிட்ட பல படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருந்தார். மாஸ்டர் மகேந்திரன் என்று அனைவராலும் அழைக்கப்பட்டு வந்த மகேந்திரன் ‘விழா’ படம் மூலம் நாயகனாக அறிமுகமானார். 



தற்போது ‘ரங்கராட்டினம்’, ‘நம்ம ஊருக்கு என்னதான் ஆச்சு’ உள்ளிட்ட பல படங்களில் கதாநாயகனாக நடித்து வருகிறார். இவர் தமிழ் மட்டுமில்லாமல், தெலுங்கிலும் பல படங்களில் நடித்துள்ளார். தற்போது மகேந்திரன் தனது சினிமா உலகில் 25வது ஆண்டை கொண்டாடி வருகிறார். இதுவரை 167 படங்களில் நடித்துள்ள மகேந்திரன் இதற்காக பல விருதுகளையும் பெற்றுள்ளார்.

Tags:    

Similar News