search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மாஸ்டர் மகேந்திரன்"

    • அறிமுக இயக்குநரான பிரசாந்த் நாகராஜன் இயக்கத்தில் அமிகோ கேரேஜ் என்ற படத்தில் மகேந்திரன் நடித்து வந்தார்.
    • இப்படத்தில் மகேந்திரனுக்கு ஜோடியாக புதுமுக கதாநாயகி அதிரா ராஜ் நடித்திருக்கிறார்.

    மாஸ்டர் மகேந்திரன் குழந்தை நட்சத்திரமாக நமக்கு அறிமுகமானவர். தற்போது கதாநாயகனாக பல திரைப்படங்களில் அவர் நடித்து வருகிறார். அண்மையில் விஜய்யின் 'மாஸ்டர்' படத்தில் நடித்திருந்தார். அதன் பின்னர் அருண் ராஜா காமராஜ் இயக்கத்தில் ஜெய் நடித்த லேபிள் வெப் சீரியசில் முக்கிய பாத்திரத்தில் நடித்திருந்தார்.

    இதனை அடுத்து, அறிமுக இயக்குநரான பிரசாந்த் நாகராஜன் இயக்கத்தில் 'அமிகோ கேரேஜ்' என்ற படத்தில் மகேந்திரன் நடித்து வந்தார். மகேந்திரனின் நடிப்புப் பயணத்தில் அமிகோ கேரேஜ் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும் எனப் படக்குழு கூறுகிறது.

    இந்தப் படம் கேங்ஸ்டர் இளைஞரின் வாழ்க்கையை கமர்ஷியல் அம்சங்களுடன் சொல்ல முற்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது. இப்படத்தில் மகேந்திரனுக்கு ஜோடியாக புதுமுக கதாநாயகி அதிரா ராஜ் நடித்திருக்கிறார்.

    அமிகோ கேரேஜ் திரைப்படத்தை பீப்பிள் புரொடக்ஷன் ஹவுஸ் சார்பாக முரளி ஶ்ரீனிவாசன் தயாரித்துள்ளார். இப்படத்திற்கு பாலமுரளி பாலு இசையமைத்துள்ளார்.

    இந்நிலையில் இப்படம் இம்மாதம் 15-ம் தேதி வெளியாகிறது என படக்குழு தெரிவித்துள்ளது.

    மேலும் அறிண்டம், அர்த்தம், கரா, ரப்பப்பரி ஆகிய படங்களில் மகேந்திரன் நடித்து வருகிறார். இப்படங்கள் விரைவில் திரைக்கு வர காத்திருக்கின்றன.

    • நவின் கணேஷ் புதிய படம் ஒன்றை இயக்குகிறார்.
    • மாஸ்டர் மகேந்திரன் கதாநாயகனாக நடிக்கும் இந்த படத்தில் ஜீவிதா கதாநாயகியாக நடிக்கிறார்.

    ஸ்ரீகாந்த் நடித்த 'எக்கோ' படத்தை இயக்கிய நவின் கணேஷ் புதிய படம் ஒன்றை இயக்குகிறார். மாஸ்டர் மகேந்திரன் கதாநாயகனாக நடிக்கும் இந்த படத்தில் ஜீவிதா கதாநாயகியாக நடிக்கிறார். இப்படத்தின் மூலம் இவர் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமாகிறார். மேலும், இந்த படத்தில் சார்லி, கும்கி அஸ்வின், கலக்கப்போவது யாரு புகழ், சரத் மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.


    இசையமைப்பாளர் சாம் சி.எஸ்-க்கு இசை ஏற்பாட்டாளராக இருந்த (arranger) அபிஷேக் ஏ.ஆர் இந்த படத்திற்கு இசையமைக்கிறார். ரவிவர்மா ஒளிப்பதிவு செய்கிறார். 'சிவகுமாரின் சபதம்' மற்றும் 'ரவுடி பேபி' படங்களுக்கு படத்தொகுப்பு செய்த தீபக் இதில் எடிட்டராக பணிபுரிகிறார். இப்படம், சென்னை மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் குறுகிய காலத்திலேயே படமாக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.


    இன்னும் பெயரிடப்படாத இந்தத் திரைப்படம் சர்வைவல் த்ரில்லராக உருவாக உள்ளது. சனா ஸ்டுடியோஸ் வழங்க முத்து, சந்தோஷ் சிவன் மற்றும் ரவி இந்தப் படத்தை இணைந்து தயாரிக்கின்றனர். இந்த படத்தை இயக்குனர்-அரசியல்வாதி சீமான், சரண், அருண்ராஜா காமராஜ் மற்றும் கல்யாண் உள்ளிட்ட கோலிவுட்டின் மிகவும் பிரபலமான திரைப்பட இயக்குனர்கள் நான்கு பேர் தொடங்கி வைத்துள்ளனர். பிரமாண்டமாக பூஜையோடு தொடங்கிய இந்த விழாவில் படத்தின் நடிகர்கள் மற்றும் படக்குழுவினர் கலந்து கொண்டனர்.

    • குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தற்போது பல படங்களில் மாஸ்டர் மகேந்திரன் நடித்து வருகிறார்.
    • இவர் தற்போது பகிர்ந்திருக்கும் வீடியோ ஒன்று இணையத்தில் பலரின் கவனத்தை ஈர்த்து வருகிறது.

    நாட்டாமை, கோயம்பத்தூர் மாப்பிள்ளை, காதலா காதலா, மின்சார கண்ணா உள்ளிட்ட பல படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்ததன் மூலம் பிரபலமடைந்தவர் மகேந்திரன். அதன்பின்னர் விழா படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். சமீபத்தில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் மற்றும் விஜய் சேதுபதி இணைந்து நடித்த மாஸ்டர் படத்தில் விஜய் சேதுபதியின் சிறு வயது கதாப்பாத்திரத்தில் நடித்து அனைவரையும் கவர்ந்தார். இவர் கதாநாயகனாக நடித்திருந்த ரிப்பப்பரி திரைப்படம் சமீபத்தில் வெளியானது.

    விஜய்யின் ரசிகர்
    விஜய்யின் ரசிகர்


    இந்நிலையில் மாஸ்டர் மகேந்திரன் பகிர்ந்திருக்கும் வீடியோ ஒன்று இணையத்தில் பலரின் கவனத்தை ஈர்த்து வருகிறது. வீடியோவில் பெட்ரோல் பங்க்கில் பணிபுரியும் மாற்றுத்திறனாளி நபர் மகேந்திரனிடம் தான் விஜய்யின் தீவிர ரசிகர் என்றும் அவரை இதுவரை பார்த்ததில்லை என்றும் எப்படியாவது பார்க்க வேண்டும் என்று கூறுகிறார். இதற்கு பதிலளித்த மகேந்திரன், இந்த வீடியோவை பார்த்து விஜய் அண்ணா அழைத்தால் ஹேப்பி என்று தெரிவித்தார்.


    விஜய் ரசிகருடன் மாஸ்டர் மகேந்திரன்
    விஜய் ரசிகருடன் மாஸ்டர் மகேந்திரன்


    மேலும் அவருடைய செல்போன் பேக் கேசில் "அன்புக்கு ஆயிரம் அர்த்தங்கள் இருக்கலாம். ஆனால் நாங்கள் கண்ட முதல் அர்த்தம் தளபதி" என்ற வாசகத்துடன் விஜய்யின் புகைப்படம் இடம்பெற்றிருந்தது. இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

    ×