search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Jeevitha"

    • நவின் கணேஷ் புதிய படம் ஒன்றை இயக்குகிறார்.
    • மாஸ்டர் மகேந்திரன் கதாநாயகனாக நடிக்கும் இந்த படத்தில் ஜீவிதா கதாநாயகியாக நடிக்கிறார்.

    ஸ்ரீகாந்த் நடித்த 'எக்கோ' படத்தை இயக்கிய நவின் கணேஷ் புதிய படம் ஒன்றை இயக்குகிறார். மாஸ்டர் மகேந்திரன் கதாநாயகனாக நடிக்கும் இந்த படத்தில் ஜீவிதா கதாநாயகியாக நடிக்கிறார். இப்படத்தின் மூலம் இவர் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமாகிறார். மேலும், இந்த படத்தில் சார்லி, கும்கி அஸ்வின், கலக்கப்போவது யாரு புகழ், சரத் மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.


    இசையமைப்பாளர் சாம் சி.எஸ்-க்கு இசை ஏற்பாட்டாளராக இருந்த (arranger) அபிஷேக் ஏ.ஆர் இந்த படத்திற்கு இசையமைக்கிறார். ரவிவர்மா ஒளிப்பதிவு செய்கிறார். 'சிவகுமாரின் சபதம்' மற்றும் 'ரவுடி பேபி' படங்களுக்கு படத்தொகுப்பு செய்த தீபக் இதில் எடிட்டராக பணிபுரிகிறார். இப்படம், சென்னை மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் குறுகிய காலத்திலேயே படமாக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.


    இன்னும் பெயரிடப்படாத இந்தத் திரைப்படம் சர்வைவல் த்ரில்லராக உருவாக உள்ளது. சனா ஸ்டுடியோஸ் வழங்க முத்து, சந்தோஷ் சிவன் மற்றும் ரவி இந்தப் படத்தை இணைந்து தயாரிக்கின்றனர். இந்த படத்தை இயக்குனர்-அரசியல்வாதி சீமான், சரண், அருண்ராஜா காமராஜ் மற்றும் கல்யாண் உள்ளிட்ட கோலிவுட்டின் மிகவும் பிரபலமான திரைப்பட இயக்குனர்கள் நான்கு பேர் தொடங்கி வைத்துள்ளனர். பிரமாண்டமாக பூஜையோடு தொடங்கிய இந்த விழாவில் படத்தின் நடிகர்கள் மற்றும் படக்குழுவினர் கலந்து கொண்டனர்.

    மனோஜ்குமார் இதயராஜ் இயக்கத்தில் ஆனந்த் நாக் - ஜீவிதா நடிப்பில் உருவாக இருக்கும் `ரெடி டு சூட்' படத்தில் பாரதிராஜாவின் மகன் மனோஜ் பாரதிராஜா வில்லனாக நடிக்க இருக்கிறார். #ReadyToShoot #ManojBharathiRaja
    சமீப காலமாகவே தமிழ் சினிமாவில் வித்தியாசமான தலைப்புகளுடன் புதுப்படங்கள் வந்த வண்ணமாக உள்ளன. அந்த வரிசையில் முற்றிலும் மாறுபட்ட தலைப்புடன் உருவாகி வரும் திரில்லர் படம் தான் `ரெடி டு சூட்'.

    எஸ்.எஸ்.வி எண்டர்பிரைசஸ் சார்பில் எஸ்.ஆறுமுகம் தயாரிக்கும் இந்த படத்தின் படத்தின் பூஜை, சமீபத்தில் சென்னையில் நடைபெற்றது. மனோஜ்குமார் இதயராஜ் என்ற புதுமுக இயக்குநர் இயக்கும் இந்த படத்தில் ஆனந்த் நாக் நாயகனாக நடிக்கிறார். இவர் நேரம், பிரேமம், வெற்றிவேல் உள்ளிட்ட படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 



    இந்த படத்தில் ஆனந்த் நாக் ஜோடியாக ஜீவிதாவும், வில்லனாக பாரதிராஜாவின் மகன் மனோஜ் கே.பாரதிராஜாவும் நடிக்கின்றனர். சதீஷ் கதிர்வேல் ஔிப்பதிவு செய்யும் இந்த படத்திற்கு அச்சு ராஜாமணி இசையமைக்கிறார். முழுக்க முழுக்க திரில்லர் கதையாக உருவாகவிருக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்க உள்ளது. #ReadyToShoot #ManojBharathiRaja

    ×