மாஸ்டர் படத்தை தொடர்ந்து லோகேஷ் கனகராஜூடன் இணையும் மாஸ்டர் மகேந்திரன்

'விழா' படத்தின் மூலம் கதாநாயகனாக ஆனார் மாஸ்டர் மகேந்திரன்.'கூலி' படத்தில் மகேந்திரன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பார் என தகவல்.
மாஸ்டர் படத்தை தொடர்ந்து லோகேஷ் கனகராஜூடன் இணையும் மாஸ்டர் மகேந்திரன்
Published on

தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக பயணத்தை தொடங்கி பிறகு கதாநாயகனாக வலம் வருபவர் மாஸ்டர் மகேந்திரன்.

குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, கோயம்புத்தூர் மாப்பிள்ளை, நட்புக்காக போன்ற பல படங்களில் நடித்த பிறகு 'விழா' படத்தின் மூலம் கதாநாயகனாக மாறினார்.

இவர், சமீபத்தில் வெளியான 'மாஸ்டர்' படத்தில் சிறு வயது விஜய்சேதுபதி கதாபாத்திரத்தில் நடித்து அனைவரின் பாராட்டுகளையும் பெற்றார்.

இந்நிலையில், ரஜினிகாந்த் நடிக்கும் 'கூலி' படத்தில் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சூட்டிங் ஸ்பாட்டில் இருக்கும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

லோகேஷ் கனகராஜின் இயக்கத்தில் ஆக்சன் படமாக தயாராகும் 'கூலி' படத்தில் மகேந்திரன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com